(பைஹகீ-குப்ரா: 3774)
بَابُ مَا يَقُولُ فِي سُجُودِ التِّلَاوَةِ
أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، ثنا أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، ثنا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، ثنا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، ثنا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ، ثنا خَالِدٌ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا (ح) وَأَخْبَرَنَا أَبُو عَلِيٍّ الرُّوذَبَارِيِّ، أنبأ أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ بَكْرٍ ثنا أَبُو دَاوُدَ، ثنا مُسَدَّدٌ، ثنا إِسْمَاعِيلُ يَعْنِي ابْنَ عُلَيَّةَ، ثنا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ رَجُلٍ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ:
كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي سُجُودِ الْقُرْآنِ بِاللَّيْلِ يَقُولُ فِي السَّجْدَةِ مِرَارًا: ” سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ
زَادَ أَبُو عَبْدِ اللهِ فِي رِوَايَتِهِ ” فَتَبَارَكَ اللهُ أَحْسَنُ الْخَالِقِينَ ” وَقَدْ مَضَى مَا رُوِيَ فِي ذَلِكَ عَنِ ابْنِ عَبَّاسٍ مَرْفُوعًا
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-3774.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-.
அஸ்ஸலாமு அலைக்கும். இந்த ஹதீஸின் தரம் பற்றிய விபரம் கீழே என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் « மேலும் பார்க்க: திர்மிதீ-580 » என்று மட்டுமே உள்ளதே தவிர எந்த விபரமும் இல்லை. அப்படியானால், திர்மிதீ-580 வது ஹதீசுக்கு நீங்கள் கொடுத்துள்ள விபரங்கள் இந்த பைஹகீ-குப்ரா: 3774 – வது ஹதீசுக்கும் பொருந்துமா? சஜ்தா திலாவத்தின் துஆ சம்பந்தமாக வரக்கூடிய எல்லா அறிவிப்புகளுமே பலவீனமானவையா?
வ அலைக்கும் ஸலாம்.
மேற்கண்ட பைஹகீ-குப்ரா-3774 என்ற செய்தியின் அறிவிப்பாளர்தொடர், திர்மிதீ-580 இன் அடிக்குறிப்பில் கீழ்கண்டவாறு இருப்பதைக் காணலாம்.
இஸ்மாயீல் பின் உலைய்யா —> காலித் அல்ஹத்தாஃ —> ஒரு மனிதர் —> அபுல்ஆலியா —> ஆயிஷா (ரலி). எனவே இரண்டு செய்திக்கும் தொடர்பு உள்ளது.
இதில் அறியப்படாத ஒரு மனிதர் இருப்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
நாம் பார்த்தவரை சஜ்தா திலாவத்தின் இந்த துஆ சம்பந்தமாக வரக்கூடிய எல்லா அறிவிப்புகளுமே பலவீனமாகத் தான் உள்ளன.
ஜஸாக்கல்லாஹ் ஹைரன். ஒரே ஹதீஸின் கீழ் எல்லா ஹதீஸ்களின் தர ஆய்வு விபரங்களைக் கொடுக்காமல், அந்தந்த ஹதீஸ்களுக்கு கீழேயே கொடுத்தீர்கள் என்றால், புரிந்துக்கொள்ள சுலபமாக இருக்கும் என்பது பணிவான வேண்டுகோள். “மேலும் பார்க்க” என்று குறிப்பிடும் இடத்தில், அதனோடு தொடர்புடைய மற்ற ஹதீஸ்களின் எண்களையும், ஹதீஸ் நூலையும் மட்டும் குறிப்பிடலாம். அல்லாஹ் உங்கள் இந்தப் பணிகளைப் பொருந்திக் கொண்டு அதிகமான நற்கூலிகளைக் கொடுப்பானாக! இந்த தலைமுறையோடு இந்த சிறப்பான இறைப்பணி நின்றுவிடாமல், இதை பல்லாண்டு காலம் தொடர்வதற்கு சிறந்த மார்க்க வாரிசுகளையும் அல்லாஹ் ஏற்படுத்துவானாக!
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஒரு ஹதீஸுடன் தொடர்புடைய அனைத்து ஹதீஸ்களை பற்றியும் விரிவான தகவலை பதிவு செய்வதற்கு அதிக நாட்கள் தேவைப்படும். ஒரு ஹதீஸ் சரியா இல்லையா என்பதை ஆய்வு செய்வதற்கு அதன் அனைத்து அறிவிப்பாளர்தொடர்களையும் நாம் பார்க்கவேண்டியுள்ளது. தற்போது அதைப் பற்றிய சுருக்கத்தை ஒரே ஹதீஸில் நாம் பதிவு செய்கிறோம். இன்ஷா அல்லாஹ் பிறகு வாய்ப்புக் கிடைக்கும்போது மற்ற செய்திகளைப் பற்றிய விவரத்தை சேர்ப்போம்.
குறைந்த அறிவிப்பாளர்தொடர்கள் உள்ள செய்திகளை முடிந்தவரை முழுமைப்படுத்துவோம். அதிகமான அறிவிப்பாளர்தொடர்கள் உள்ள செய்திகளை வாய்ப்புக் கிடைக்கும்போது இன்ஷா அல்லாஹ் முழுமைப்படுத்துவோம்.