தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-241

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நான் எனது தாயாருடனும் சிறிய தாயாருடனும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம். அப்போது அவ்விருவர்களில் ஒருவர் குளிக்கும்போது என்ன செய்வீர்கள்? என்று அன்னையாரிடம் வினவினார். அதற்கு அன்னையார் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்கு உலூச் செய்வது போன்று உலூச் செய்வார்கள். பிறகு தனது தலையில் மூன்றுதடவை தண்ணீரை ஊற்றுவார்கள். நாங்கள் எங்களது தலைகளில் (தலைமுடி) பின்னல்கள் காரணமாக ஐந்து தடவைகள் ஊற்றுவோம் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஜுமைஃபின் உமைர்.

(அபூதாவூத்: 241)

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ يَعْنِي ابْنَ مَهْدِيٍّ، عَنْ زَائِدَةَ بْنِ قُدَامَةَ، عَنْ صَدَقَةَ، حَدَّثَنَا جُمَيْعُ بْنُ عُمَيْرٍ أَحَدُ بَنِي تَيْمِ اللَّهِ بْنِ ثَعْلَبَةَ قَالَ

دَخَلْتُ مَعَ أُمِّي وَخَالَتِي عَلَى عَائِشَةَ، فَسَأَلَتْهَا إِحْدَاهُمَا كَيْفَ كُنْتُمْ تَصْنَعُونَ عِنْدَ الْغُسْلِ؟ فَقَالَتْ عَائِشَةُ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ وُضُوءَهُ لِلصَّلَاةِ، ثُمَّ يُفِيضُ عَلَى رَأْسِهِ ثَلَاثَ مَرَّاتٍ، وَنَحْنُ نُفِيضُ عَلَى رُءُوسِنَا خَمْسًا مِنْ أَجْلِ الضُّفُرِ»


AbuDawood-Tamil-241.
AbuDawood-Shamila-241.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.