பாடம்:
அறப்போர் (மறுமை நாள் வரை) தொடர்ந்து நடைபெறும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது சமுதாயத்தில் ஒரு பிரிவினர் சத்தியத்திற்காக போராடிக் கொண்டே இருப்பார்கள்; தங்கள் எதிரிகளை வெல்பவர்களாக இருப்பார்கள்; அவர்களில் கடைசியில் வருவோர் மஸீஹுத் தஜ்ஜாலுடன் சண்டையிடுவார்கள்.
(அபூதாவூத்: 2484)بَابٌ فِي دَوَامِ الْجِهَادِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ قَتَادَةَ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي يُقَاتِلُونَ عَلَى الْحَقِّ ظَاهِرِينَ عَلَى مَنْ نَاوَأَهُمْ، حَتَّى يُقَاتِلَ آخِرُهُمُ الْمَسِيحَ الدَّجَّالَ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2484.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2128.
3 . இந்தக் கருத்தில் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
மேலும் பார்க்க: புகாரி-71 .
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “துல்ஹஜ் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களும் நோன்பு நோற்பார்கள்.” சுனன் அபுதாவூத் 2437.
இதன் உண்மைத்தன்மை வேண்டும்
வ அலைக்கும் ஸலாம்.
பார்க்க: அபூதாவூத்-2437 இந்தச் செய்தி அறிவிப்பாளர்தொடரில் குளறுபடியாக இருப்பதால் பலவீனமானது என சில அறிஞர்கள் கூறியுள்ளனர். என்றாலும் இந்தக் கருத்து மற்ற செய்திகளிலும் வந்துள்ளது. துல்ஹஜ் மாதத்தின் 10 நாட்களும் சிறப்பிற்குரியவை என்ற அடிப்படையில் பெருநாளைத் தவிர மற்ற நாட்களில் நோன்பு வைக்கலாம் என்று அந்த ஹதீஸிலிருந்து புரிந்துக் கொள்ளலாம். (பார்க்க : புகாரி-969)