தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2710

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

மோசடியின் விளைவு.

கைபர் போரில் நபித்தோழர் ஒருவர் மரணித்து விட்டார். இதை மக்கள், நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்கள் தோழருக்கு நீங்கள் தொழுகை நடத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள். அதனால் மக்களின் முகங்கள் மாறிவிட்டன. எனவே, நபி (ஸல்) அவர்கள், “உங்கள் தோழர் அல்லாஹ்வின் பாதையில் போரிடும் போது மோசடி செய்து விட்டார்” என்று கூறினார்கள்.

எனவே  அவரது பொருட்களை நாங்கள் தேடிப் பார்த்தோம். (எதிரிப் படையினரான) ஒரு யூதருக்குச் சொந்தமான இரண்டு திர்ஹம் மதிப்பு கூட இல்லாத ஒரு மாலையை அவரது பொருட்களுடன் கண்டோம்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி)

(அபூதாவூத்: 2710)

بَابٌ فِي تَعْظِيمِ الْغُلُولِ

حَدَّثَنَا مُسَدَّدٌ، أَنَّ يَحْيَى بْنَ سَعِيدٍ، وَبِشْرَ بْنَ الْمُفَضَّلِ حَدَّثَاهُمْ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ أَبِي عَمْرَةَ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ،

أَنَّ رَجُلًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تُوُفِّيَ يَوْمَ خَيْبَرَ، فَذَكَرُوا ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «صَلُّوا عَلَى صَاحِبِكُمْ». فَتَغَيَّرَتْ وُجُوهُ النَّاسِ لِذَلِكَ، فَقَالَ: «إِنَّ صَاحِبَكُمْ غَلَّ فِي سَبِيلِ اللَّهِ». فَفَتَّشْنَا مَتَاعَهُ فَوَجَدْنَا خَرَزًا مِنْ خَرَزِ يَهُودَ لَا يُسَاوِي دِرْهَمَيْنِ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-2335.
Abu-Dawood-Shamila-2710.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2338.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் ஸைத் பின் காலித் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ராவீ-2426-அபூஅம்ரா என்பவர் பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    மட்டுமே நம்பகமானர் பட்டியலில் கூறியுள்ளார்.
  • ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    அவர்கள், இவர் உண்மையாளராக அறியப்பட்டவர் என்று கூறியுள்ளார். (தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்களும் இதை ஏற்றுள்ளார்) இப்னுஹிப்பான், ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    இவ்விருவரின் நற்சான்று போதுமானதல்ல என்பதால் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் இந்த செய்தியை பலவீனமானது எனக் கூறியுள்ளார்.
  • ஷுஐப் அவர்கள், இது ஹஸன் என்பதற்கு வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவரை மக்பூல் தரத்தில் கூறியுள்ளார். (மேலும் பார்க்க அஹ்மத்-17031 )

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-1320 , அஹ்மத்-17031 , 21675 , இப்னு மாஜா-2848 , அபூதாவூத்-2710 , நஸாயீ-1959 , இப்னு ஹிப்பான்-4853 , ஹாகிம்-1346 , 2582 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.