தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-277

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நான்காம் அறிவிப்பில், “அதிக இரத்தப்போக்குள்ளவள் (வழக்க மான) மாதவிடாய்க் காலம் வரை தொழுகையை விட்டுவிட்டு அதற்கு அடுத்தடுத்த நாள்களில் தொழுகை நேரம் வந்துவிட்டால் குளித்துக்கொள்ள வேண்டும். மேலும் (அதிகப்படியான) துணி யால் உள்ளாடை அணிந்துகொள்ள வேண்டும். பின்பு தொழ வேண்டும் என்று நபி (ஸல்) சொன்னார்கள்” என்று கூடுதலாகக் காணப் படுகிறது.

….

சூதக ரத்தப் போக்கு உள்ளவள் தொடர்பாக, அவர் தனது மாதவிடாய் நாட்களில் (மட்டும்) தொழுகையை விட்டு விடுவாராக! பிறகு குளித்து தொழுவாராக. மேலும் ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்தல் வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஹம்மது ஜாபிர் பின் ஜியாத்

(அபூதாவூத்: 277)

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا صَخْرُ بْنُ جُوَيْرِيَةَ، عَنْ نَافِعٍ بِإِسْنَادِ اللَّيْثِ وَبِمَعْنَاهُ قَالَ

«فَلْتَتْرُكِ الصَّلَاةَ قَدْرَ ذَلِكَ، ثُمَّ إِذَا حَضَرَتِ الصَّلَاةُ فَلْتَغْتَسِلْ، وَلْتَسْتَثْفِرْ بِثَوْبٍ ثُمَّ تُصَلِّي»


Abu-Dawood-Tamil-240.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-277.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




(இமாம் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
குறிப்பிடுகின்றார்கள் :

உஸ்மான் பின் அபீஷைபா என்பார், அவர் நோன்பு நோற்பாராக மேலும் தொழுவாராக என்று கூடுதலாக அறிவிக்கின்றார். 

(குறிப்பு: இந்த ஹதீஸை இமாம் திர்மிதீ, இப்னு மாஜா ஆகியோரும் பதிவு செய்துள்ளனர்.

கூபா நகரின் நீதிபதியான ஷரீக் என்பாரை அநேகர் குறை கூறியுள்ளனர். அதை கூபா நகரத்தை சார்ந்த அபுல் யக்லான் என்ற உஸ்மான் பின் அபீர் என்பாரின் ஹதீஸ் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப் படாது.)

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.