தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2874

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

அநாதைகளின் சொத்துக்களை (அநியாயமாக) உண்பது குறித்து வந்துள்ள கண்டனம்.

 “அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவை எவை?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள்,

1 . “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும்,
2 . சூனியம் செய்வதும்,
3 . நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும்,
4 . வட்டி உண்பதும்,
5 . அனாதைகளின் செல்வத்தை உண்பதும்,
6 . போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும்,
7 . கற்புள்ள அப்பாவிகளான இறைநம்பிக்கை கொண்ட பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று (பதில்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

(இதன் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெறும்) அபுல் ஃகைஸ் என்பவர் இப்னு முதீஃ அவர்களின் அடிமையான ஸாலிம் என்பவர் ஆவார்.

(அபூதாவூத்: 2874)

بَابُ مَا جَاءَ فِي التَّشْدِيدِ فِي أَكْلِ مَالِ الْيَتِيمِ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي الْغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ». قِيلَ: يَا رَسُولَ اللَّهِ وَمَا هُنَّ؟ قَالَ: «الشِّرْكُ بِاللَّهِ، وَالسِّحْرُ، وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ، وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ، وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْغَافِلَاتِ الْمُؤْمِنَاتِ»

قَالَ أَبُو دَاوُدَ: «أَبُو الْغَيْثِ سَالِمٌ مَوْلَى ابْنِ مُطِيعٍ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2874.
Abu-Dawood-Alamiah-2490.
Abu-Dawood-JawamiulKalim-2493.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஸயீத்

3 . அப்துல்லாஹ் பின் வஹ்ப்

4 . ஸுலைமான் பின் பிலால்

5 . ஸவ்ர் பின் ஸைத்

6 . ஸாலிம் அல்அதவீ-அபுல் ஃகைஸ்

7 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-3938-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஸயீத் அல்ஹம்தானீ
    என்பவர் பற்றி அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஸாலிஹ், இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    ஸாஜீ போன்றோர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.
  • இவர் ஒரு செய்தியை தவறாக அறிவித்துள்ளார் என்பதால் நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    அவர்கள் இவர் அந்தளவுக்கு பலமானவர் அல்ல என்று கூறியுள்ளார்…
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை ஸதூக் எனும் தரத்தில் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுல் கமால்-1/312, தஹ்தீபுத் தஹ்தீப்-1/23, தக்ரீபுத் தஹ்தீப்-1/89)


இந்தச் செய்தியை அப்துல்லாஹ் பின் வஹ்ப் அவர்களிடமிருந்து மற்ற பலமானவர்களும் அறிவித்துள்ளனர் என்பதால் இது ஸஹீஹ் லிஃகைரிஹீ ஆகும்.


மேலும் பார்க்க: புகாரி-2766 .