தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3182

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அப்துர்ரஹ்மான் பின் ஜவ்ஷன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் உஸ்மான் பின் அபுல்ஆஸ் (ரஹ்) அவர்களின் ஜனாஸாவில் கலந்து கொண்டோம். நாங்கள் மெதுவாக நடந்து சென்றுக்கொண்டிருந்தோம். அப்போது (இடையில்) அபூபக்ரா (ரலி) அவர்கள் வந்து எங்களுடன் சேர்ந்தார்கள்.

அவர்கள், (மக்களை நோக்கிச்) சாட்டையை உயர்த்தி, “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஜனாஸாவை பின்தொடந்து செல்லும்) போது ஓட்டமாக ஓடும் அளவுக்கு விரைந்து சென்றதை பார்த்திருக்கின்றோம்” என்று கூறினார்கள்.

(அபூதாவூத்: 3182)

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عُيَيْنَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ،

أَنَّهُ كَانَ فِي جَنَازَةِ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ وَكُنَّا نَمْشِي مَشْيًا خَفِيفًا، فَلَحِقَنَا أَبُو بَكْرَةَ فَرَفَعَ سَوْطَهُ، فَقَالَ: «لَقَدْ رَأَيْتُنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَرْمُلُ رَمَلًا»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-3182.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2770.




  • இந்த அறிவிப்பாளர்தொடரில் உஸ்மான் பின் அபுல்ஆஸ் (ரஹ்) அவர்களின் ஜனாஸாவில் என்று வந்திருந்தாலும் மற்ற அறிவிப்புகளில் அப்துர்ரஹ்மான் பின் ஸமுரா (ரஹ்) அவர்களின் ஜனாஸா என்று வந்துள்ளது. அதுதான் சரியானதாகும்.

மேலும் பார்க்க : அஹ்மத்-20375 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.