தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3202

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: More Info

3202. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தடவை ஒரு முஸ்லிமான மனிதருக்காக எங்களுக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தும் போது அவர்கள் பின்வரும் துஆவை கூறியதை செவியேற்றேன்.

அல்லாஹும்ம இன்ன ஃபுலானப்ன ஃபுலானின் ஃபீ திம்மதி(க்)க. வஹப்லி ஜிவாரி(க்)க ஃப(க்)கிஹி மின் ஃபித்ன(த்)தில் கப்ரி வஅதாபின்னாரி. வஅன்(த்)த அஹ்லுல் வஃபாயி வல்ஹம்தி. அல்லாஹும்ம ஃபக்ஃபிர்லஹு வர்ஹம்ஹு இன்ன(க்)க அன்(த்)தல் கஃபூருர் ரஹீம்.

பொருள்: இறைவா! இன்னாரின் மகனான இவர் உனது பொறுப்பில் இருக்கிறார். கப்ரின் வேதனையை விட்டு இவரைப் பாதுகாப்பாயாக! நரகின் வேதனையை விட்டும் காப்பாயாக! நீயே வாக்குறுதிகளை நிறைவேற்றுபவன். புகழுக்குரியவன். இறைவா! இவரை மன்னித்து அருள் புரிவாயாக! நீயே மன்னிப்பவன். அருள் புரிபவன்.

அறிவிப்பவர் : (ரலி)

வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)

வாஸிலா பின் அஸ்கஃ-அல்லைஸீ (ரலி) – Wathla bin al-'Asqa'

இறப்பு: ஹிஜ்ரி 85, ஷாம்

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: வாஸிலா பின் அஸ்கஃ பின் கஅப் பின் ஆமிர் பின் லைஸ் பின் பக்ர்

தந்தை பெயர்: அஸ்கஃ

வம்சம்: லைஸீ, பக்ரீ, கினானீ

புனைப்பெயர்: அபூ அஸ்கஃ, அபூ குர்ஸாஃபா, அபூ முஹம்மத், அபூ கத்தாப், அபூ ஷத்தாத்

ஊர் பெயர்: மதீனா, ஷாம்

பயணித்த ஊர்கள்: மதீனா, ஷாம், திமிஷ்க், ஹிம்ஸ், பஸரா, பைத்துல் முகத்தஸ், பலாத்

பிறப்பு: ஹிஜாஸ்

இறப்பு: ஹிஜ்ரி 85, ஷாம்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

வாஸிலா பின் அஸ்கஃ ரலி ஒரு நபித்தோழர் ஆவார். இவர் தபூக் போருக்கு முன் இஸ்லாத்தைத் தழுவி, அப் போரில் நபி (ஸல்) அவர்களுடன் கலந்துகொண்டார். இவர் அஹ்லுஸ் ஸுஃப்பாவைச் சேர்ந்தவர்.

மதீனாவிலும் ஷாமிலும் வசித்தார். ஹிஜ்ரி 83 அல்லது 85 ஆம் ஆண்டு ஷாமில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூ ஹுரைரா, உம்மு ஸலமா, அபூ மர்ஸத் அல்கன்வீ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஃபஸீலா பின்த் வாஸிலா, அபூ இத்ரீஸ் அல்கவ்லானீ, பஸ்ர் பின் உபைதுல்லாஹ் அல்ஹழ்ரமீ, ஷத்தாத் அபூ அம்மார், மக்ஹூல் அஷ்ஷாமீ, அப்துல்வாஹித் பின் அப்துல்லாஹ் அந்நஸ்ரீ, அபூ அல்மலீஹ் பின் உஸாமா, யூனுஸ் பின் மைஸரா பின் ஹல்பஸ், மஃரூஃப் அல்கய்யாத், இப்ராஹீம் பின் அபீ அப்லா, அப்துல்லாஹ் பின் ஆமிர் அல்யஹ்ஸபீ, அம்ர் பின் அப்துல்லாஹ் அல்ஹழ்ரமீ

வேறு பெயர்கள்: அபூ குர்ஸாஃபா, அபூ முஹம்மத், அபூ கத்தாப், அபூ ஷத்தாத், வஃஇலா பின் அஸ்கஃ, வஃஇலா, அஸ்லா பின் அஸ்கஃ


ஆதாரம்: muslimscholars.info (4049) · Should verify


حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ، ح وحَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ، أَخْبَرَنَا الْوَلِيدُ – وَحَدِيثُ عَبْدِ الرَّحْمَنِ أَتَمُّ – حَدَّثَنَا مَرْوَانُ بْنُ جَنَاحٍ، عَنْ يُونُسَ بْنِ مَيْسَرَةَ بْنِ حَلْبَسٍ، عَنْ وَاثِلَةَ بْنِ الْأَسْقَعِ، قَالَ:

صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَجُلٍ مِنَ الْمُسْلِمِينَ، فَسَمِعْتُهُ يَقُولُ: ” اللَّهُمَّ إِنَّ فُلَانَ بْنَ فُلَانٍ فِي ذِمَّتِكَ، فَقِهِ فِتْنَةَ الْقَبْرِ – قَالَ عَبْدُ الرَّحْمَنِ: مِنْ ذِمَّتِكَ وَحَبْلِ جِوَارِكَ، فَقِهِ مِنْ فِتْنَةِ الْقَبْرِ – وَعَذَابِ النَّارِ، وَأَنْتَ أَهْلُ الْوَفَاءِ وَالْحَمْدِ، اللَّهُمَّ فَاغْفِرْ لَهُ وَارْحَمْهُ إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ “،

قَالَ عَبْدُ الرَّحْمَنِ: عَنْ مَرْوَانَ بْنِ جَنَاحٍ

 


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-2787.
Abu-Dawood-Shamila-3202.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2789.



إسناده حسن رجاله ثقات عدا مروان بن جناح الأموي وهو صدوق حسن الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் மர்வான் பின் ஜனாஹ் சுமாரானவர் என்பதால் இது ஹஸன் தரம் என ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    அவர்கள் கூறியுள்ளார்.

சரியான ஹதீஸ் பார்க்க : இப்னு மாஜா-1499 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.