தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3334

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

வட்டியை ரத்து செய்தல்.

அம்ர் பின் அல்அஹ்வஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜதுல் வதாவில் கூறிய (பின்வரும்) செய்திகளை நான் செவியேற்றுள்ளேன்.

அறியாமைக் காலத்து வட்டி (இன்று) ரத்து செய்யப்படுகின்றது. உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.

அறியாமைக் காலத்து (கொலைக்காக இப்போது) பழி வாங்குதல் (இன்றுடன்) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன்முதலில் ரத்து செய்யப்படுவது எங்களது குடும்பத்தைச் சார்ந்த ரபீஆவுடைய குழந்தை ஹாரிஸ் பின் அப்துல் முத்தலிபுக்காக வாங்க வேண்டிய பழியாகும்.

(ரபீஆ, அப்துல் முத்தலிபுடைய பேரர் ஆவார்) இந்த ரபீஆவின் குழந்தை ஸஃத் கிளையாரான பனூ லைஸிடம் பால் குடித்துக் கொண்டிருக்கும் போது ஹுதைல் கிளையினர் கொன்று விட்டனர். (இதுவரை பழி தீர்க்கப்படாமல் இருக்கும் அந்த உயிருக்காக இனி பழி தீர்க்கப்படாது என்று இப்போது அறிவித்து விட்டேன்)

(பின்னர்) “இறைவா! (நீ தெரிவிக்கச் சொன்னவற்றை) நான் தெரிவித்துவிட்டேனா? என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்களும் நீங்கள் தெரிவித்துவிட்டீர்கள் என்று (மூன்று முறை) கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வே! இதற்கு நீயே சாட்சி என்று மூன்று முறை கூறினார்கள்.

(அபூதாவூத்: 3334)

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، حَدَّثَنَا شَبِيبُ بْنُ غَرْقَدَةَ، عَنْ سُلَيْمَانَ بْنِ عَمْرٍو، عَنْ أَبِيهِ، قَالَ

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الْوَدَاعِ يَقُولُ: «أَلَا إِنَّ كُلَّ رِبًا مِنْ رِبَا الْجَاهِلِيَّةِ مَوْضُوعٌ، لَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ، لَا تَظْلِمُونَ، وَلَا تُظْلَمُونَ، أَلَا وَإِنَّ كُلَّ دَمٍ مِنْ دَمِ الْجَاهِلِيَّةِ مَوْضُوعٌ، وَأَوَّلُ دَمٍ أَضَعُ مِنْهَا، دَمُ الْحَارِثِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، كَانَ مُسْتَرْضِعًا فِي بَنِي لَيْثٍ فَقَتَلَتْهُ هُذَيْلٌ» قَالَ: «اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ»، قَالُوا: نَعَمْ، ثَلَاثَ مَرَّاتٍ، قَالَ: «اللَّهُمَّ اشْهَدْ»، ثَلَاثَ مَرَّاتٍ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-2896.
Abu-Dawood-Shamila-3334.
Abu-Dawood-Alamiah-2896.
Abu-Dawood-JawamiulKalim-2899.




إسناده حسن في المتابعات والشواهد رجاله ثقات عدا سليمان بن عمرو الجشمي وهو مقبول (الجوامع الكلم)

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-18440-ஸுலைமான் பின் அம்ர் பற்றி இப்னுல் கத்தான் அறியப்படாதவர் என்றும், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் மக்பூல் என்ற தரத்திலும் கூறியுள்ளார். (தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.2/104, தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/411)
  • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள், இவரைப் பற்றி பலமானவர் என்று கூறியுள்ளார். (நூல்: அல்காஷிஃப் 2/532)

இந்தக் கருத்தில் அம்ர் பின் அல்அஹ்வஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஷபீப் பின் கர்கத் —> ஸுலைமான் பின் அம்ர் —> அம்ர் பின் அல்அஹ்வஸ் (ரலி)

பார்க்க : அஹ்மத்-15507 , 16064 , இப்னு மாஜா-1851 , 2669 , 3055 , அபூதாவூத்-3334 , திர்மிதீ-1163 , 2159 , 3087 , …ஹாகிம்-318

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.