தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3488

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வதுக்கு அருகில் அமர்ந்திருப்பதை நான் கண்டேன். அவர்கள் தமது பார்வையை வானத்தை நோக்கி உயர்த்தி சிரித்தார்கள். அப்போது அவர்கள் அல்லாஹ் யூதர்களைச் சபிப்பானாக என்று மூன்று முறை கூறினார்கள். மேலும் அல்லாஹ் அவர்களுக்குக் கொழுப்பைத்தடை செய்தான். ஆனால் அவர்கள் அதை விற்று அதன் கிரயத்தைச் சாப்பிட்டார்கள். அல்லாஹ் ஒரு கூட்டத்தாருக்கு ஒரு பொருளை உண்ணக் கூடாது என்று தடை செய்தால் அதை விற்ற காசையும் (சேர்த்தே) தடை செய்கிறான் என்று கூறினார்கள்.

(அபூதாவூத்: 3488)

حَدَّثَنَا مُسَدَّدٌ، أَنَّ بِشْرَ بْنَ الْمُفَضَّلِ، وَخَالِدَ بْنَ عَبْدِ اللَّهِ، حَدَّثَاهُمُ الْمَعْنَى، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ بَرَكَةَ، قَالَ مُسَدَّدٌ: فِي حَدِيثِ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ بَرَكَةَ أَبِي الْوَلِيدِ، ثُمَّ اتَّفَقَا عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:

رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسًا عِنْدَ الرُّكْنِ، قَالَ: فَرَفَعَ بَصَرَهُ إِلَى السَّمَاءِ فَضَحِكَ، فَقَالَ: «لَعَنَ اللَّهُ الْيَهُودَ، ثَلَاثًا إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْهِمُ الشُّحُومَ فَبَاعُوهَا وَأَكَلُوا أَثْمَانَهَا، وَإِنَّ اللَّهَ إِذَا حَرَّمَ عَلَى قَوْمٍ أَكْلَ شَيْءٍ حَرَّمَ عَلَيْهِمْ ثَمَنَهُ»

وَلَمْ يَقُلْ فِي حَدِيثِ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ الطَّحَّانِ: «رَأَيْتُ» وَقَالَ: «قَاتَلَ اللَّهُ الْيَهُودَ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-3026.
Abu-Dawood-Shamila-3488.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3029.




இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-2221 , 2678 , 2961 , அபூதாவூத்-3488 , இப்னு ஹிப்பான்-4938 ,

கூடுதல் தகவல் பார்க்க: புகாரி-2236 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.