நபி (ஸல்) அவர்கள் ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம் வந்தார்கள். அவர் (நோன்பு திறப்பதற்காக) ரொட்டியையும், ஸைத்தூன் எண்ணெயையும் கொண்டுவந்தார். நபி (ஸல்) அவர்கள் அதைச் சாப்பிட்டார்கள்.
பின்னர், நபி (ஸல்) அவர்கள் “உங்களிடத்தில் நோன்பாளிகள் நோன்பு திறந்துள்ளனர். உங்களின் உணவை நல்லோர்கள் சாப்பிட்டனர். உங்களுக்கு வானவர்கள் இறையருளை வேண்டுகின்றனர்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
(அபூதாவூத்: 3854)حَدَّثَنَا مَخْلَدُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ إِلَى سَعْدِ بْنِ عُبَادَةَ، فَجَاءَ بِخُبْزٍ وَزَيْتٍ، فَأَكَلَ، ثُمَّ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ، وَأَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ، وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-3854.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3358.
- இது வெளிப்படையில் சரியான அறிவிப்பாளர்தொடர் என்றாலும் இதை ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர். காரணம் இந்த செய்தியை மஃமர் , ஸாபித் வழியாக அறிவிக்கிறார்.
- மஃமர் பலமானவர் என்றாலும் இராக் வாசிகள் வழியாக அறிவிக்கும் செய்திகள் அதிலும் பஸராவாசிகள் வழியாக அறிவிக்கும் செய்திகள் குளறுபடியானவை என இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் விமர்சித்துள்ளார்கள். (மஃமர், இராக் வாசிகளான ஸுஹ்ரி, இப்னு தாவூஸ் போன்றோர் வழியாக அறிவிக்கும் செய்திகள் மட்டுமே சரியானவை) - ஸாபித் பஸராவைச் சேர்ந்தவர் என்பதால் அவரிடமிருந்து மஃமர் அறிவிப்பது சரியான செய்தி அல்ல. (நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.4/125)
وقال ابن أبي خيثمة : سمعت يحيى بن معين يقول : إذا حدثك معمر عن العراقيين فخالفه إلا عن الزهري وابن طاوس ؛ فإن حديثه عنهما مستقيم ، فأما أهل الكوفة وأهل البصرة فلا ، وما عمل في حديث الأعمش شيئا
تهذيب التهذيب: (4 / 125)
ثقة ثبت فاضل ، إلا أن في روايته عن ثابت والأعمش وعاصم بن أبي النجود ، وهشام بن عروة شيئا ، وكذا فيما حدث به بالبصرة
تقريب التهذيب: (1 / 961)
மேலும் பார்க்க: ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-1577.
சமீப விமர்சனங்கள்