தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-394

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

உமர் பின் அப்துல் அஜீஸ் மிம்பரில் உட்கார்த்திருந்தார். அவர் அஸர் தொழுகையை கொஞ்சம் கால தாமதப்படுத்தினார். அறிந்து கொள்ளுங்கள்! ஜிப்ரயீல் (அலை) முஹம்மது (ஸல்) அவர்களுக்கு தொழுகை நேரத்தை அறிவித்துக் கொடுத்தார்கள் என்று உமரிடம் உர்வா அறிவிக்கத் தொடங்கியதும் நீங்கள் என்ன அறிவிக்கப் போகின்றீர்கள் என்பதை கவனித்துக் கொள்க! என்று உர்வாவிடம் உமர் சொன்னார். அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கின்றேன் என்று அபூமஸ்வூத் அன்சாரி இவரிடமிருந்து நான் செவியுற்றேன் என்று பமர் பின் அபூமஸ்வூத் இவரிடமிருந்து நான் செவியுற்றேன் என்று உர்வா அறிவிக்கின்றார். என்னிடம் ஜிப்ரியீல் (அலை) இறங்கி வந்தார்கள். எனக்கு தொழுகை நேரத்தை அறிவித்தார்கள். எனவே நான் அவர்களுடன் தொழுதேன். மீண்டும் நான் அவர்களுடன் தொழுதேன். மீண்டும் நான் அவர்களுடன் தொழுதேன். மீண்டும் நான் அவர்களுடன் தொழுதேன். மீண்டும் நான் அவர்களுடன் தொழுதேன் என்று ஐந்து நேரத் தொழுகைகளை தன் விரல்களால் எண்ணியவாறு நபி (ஸல்) அவர்கள் கூற நான் (அபூமஸ்வூத் அல் அன்சாரி) செவியுற்றேன். சூரியன் உச்சி சாய்கின்ற நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களை லுஹர் தொழக் கண்டேன். சில வேளை சூடு அதிகமாகும் நேரத்தில் லுஹரை பிற்படுத்தவும் செய்வார்கள். சூரியன் உச்சிக்கு உயர்ந்து அதில் மஞ்சள் நிறம் கலப்பதற்கு முன்பு வெண்மையாக இருக்கும் போது அவர்கள் அஸரை தொழுவார்கள். அந்த நேரத்தில் ஒருவர் (அஸரை) தொழுதுவிட்டு சூரியன் மறையும் முன்னால் துல்ஹுலைபாவுக்கு வந்து விடுவார். சூரியன் (மேற்கில்) விழுகின்ற நேரத்தில் மக்ரிபை தொழுவார்கள். அடிவானம் கருத்துவிடும் நேரத்தில் இஷாவை தொழுவார்கள். பிற்படுத்தவும் செய்வார்கள். சுப்ஹ் தொழுகையை ஒரு கட்டத்தில் அதிகாலை இருட்டிலேயே தொழுது விடுவார்கள். பிறகு இன்னொரு கட்டத்தில் அதிகாலை வெளுத்துவிடும்

போது தொழுவார்கள். இதற்கு பிறகு அவர்கள் மரணிக்கும் வரை அதிகாலையில் தொழுவது வழக்கமாகி விட்டது. அதிகாலை வெளுக்கும் போது தொழும் வழக்கத்திற்கு அவர்கள் திரும்பவில்லை.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

இந்த ஹதீஸை ஜுஹ்ரி வாயிலாக மஃமர், மாலிக், இப்னு உஐனா, ஷுஐப் பின் அபீஹம்சா, லைஸ் இன்னும் மற்றவர்களும் அறிவிக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்கள் தொழத நேரத்தை குறிப்பிடாததோடு அதை அவர்கள் விவரிக்கவுமில்லை.

மஃமர் இன்னும் அவரது தோழர்கள் அறிவிக்கும் அறிவிப்பை போன்று உர்வா வாயிலாக ஹபீப் பின் அபூமர்சூக், ஹிஷாம் பின் உர்வா ஆகியோர் அறிவிக்கின்றார்கள். ஆனால் ஹபீப் என்ற அறிவிப்பாளர் (தனது அறிவிப்புத் தொடரில் பஷிர் பின் மஸ்வூதை குறிப்பிடவில்லை.)

நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஜாபிர் வாயிலாக வஹப் பின் கைஸான் அறிவிக்கையில் மக்ரிப் நேரத்தை குறிப்பிடுகின்றார்.

ஜிப்ரயீல் (அலை) நபி (ஸல்) அவர்களிடம் (முந்திய நாளை போல்) மறுநாளும் சூரியன் மறைகின்ற அதே நேரத்தில் தான் வந்தார்கள் என்று அறிவிக்கின்றார்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

பிறகு மறுநாளும் அதே நேரத்தில் தான் எனக்கு ஜிப்ரயீல் (அலை) தொழுவித்தார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) மூலம் அறிவிக்கப்படுகின்றது.

இது போன்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக தன் பாட்டன் தன் தந்தை வழியாக ஹஸ்ஸான் பின் அதிய்யாவிடமிருந்து அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் வாயிலாக அறிவிக்கப்படுகின்றது.

(அபூதாவூத்: 394)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ اللَّيْثِيِّ، أَنَّ ابْنَ شِهَابٍ، أَخْبَرَهُ،

أَنّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ كَانَ قَاعِدًا عَلَى الْمِنْبَرِ فَأَخَّرَ الْعَصْرَ شَيْئًا، فَقَالَ لَهُ: عُرْوَةُ بْنُ الزُّبَيْر أَمَا إِنَّ جِبْرِيلَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَخْبَرَ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِوَقْتِ الصَّلَاةِ، فَقَالَ لَهُ عُمَر: اعْلَمْ مَا تَقُولُ: فَقَالَ: عُرْوَةُ سَمِعْتُ بَشِيرَ بْنَ أَبِي مَسْعُودٍ يَقُولُ: سَمِعْتُ أَبَا مَسْعُودٍ الْأَنْصَارِيَّ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «نَزَلَ جِبْرِيلُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَنِي بِوَقْتِ الصَّلَاةِ فَصَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ» يَحْسُبُ بِأَصَابِعِهِ خَمْسَ صَلَوَاتٍ. «فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الظُّهْرَ حِينَ تَزُولُ الشَّمْسُ، وَرُبَّمَا أَخَّرَهَا حِينَ يَشْتَدُّ الْحَرُّ، وَرَأَيْتُهُ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ بَيْضَاءُ قَبْلَ أَنْ تَدْخُلَهَا الصُّفْرَةُ، فَيَنْصَرِفُ الرَّجُلُ مِنَ الصَّلَاةِ، فَيَأْتِي ذَا الْحُلَيْفَةِ قَبْلَ غُرُوبِ الشَّمْسِ، وَيُصَلِّي الْمَغْرِبَ حِينَ تَسْقُطُ الشَّمْسُ، وَيُصَلِّي الْعِشَاءَ حِينَ يَسْوَدُّ الْأُفُقُ، وَرُبَّمَا أَخَّرَهَا حَتَّى يَجْتَمِعَ النَّاسُ، وَصَلَّى الصُّبْحَ مَرَّةً بِغَلَسٍ، ثُمَّ صَلَّى مَرَّةً أُخْرَى فَأَسْفَرَ بِهَا، ثُمَّ كَانَتْ صَلَاتُهُ بَعْدَ ذَلِكَ التَّغْلِيسَ حَتَّى مَاتَ، وَلَمْ يَعُدْ إِلَى أَنْ يُسْفِرَ»

قَالَ أَبُو دَاوُدَ: رَوَى هَذَا الْحَدِيثَ عَنِ الزُّهْرِيِّ، مَعْمَرٌ وَمَالِكٌ، وَابْنُ عُيَيْنَةَ وَشُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ وَاللَّيْثُ بْنُ سَعْدٍ وَغَيْرُهُمْ لَمْ يَذْكُرُوا الْوَقْتَ الَّذِي صَلَّى فِيهِ وَلَمْ يُفَسِّرُوهُ، وَكَذَلِكَ أَيْضًا رَوَى هِشَامُ بْنُ عُرْوَةَ وَحَبِيبُ بْنُ أَبِي مَرْزُوقٍ، عَنْ عُرْوَةَ نَحْوَ رِوَايَةِ مَعْمَرٍ وَأَصْحَابِهِ إِلَّا أَنَّ حَبِيبًا لَمْ يَذْكُرْ بَشِيرًا، وَرَوَى وَهْبُ بْنُ كَيْسَانَ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقْتَ الْمَغْرِبِ قَالَ: «ثُمَّ جَاءَهُ لِلْمَغْرِبِ حِينَ غَابَتِ الشَّمْسُ يَعْنِي مِنَ الْغَدِ وَقْتًا وَاحِدًا». وَكَذَلِكَ رُوِيَ عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «ثُمَّ صَلَّى بِيَ الْمَغْرِبَ». يَعْنِي مِنَ الْغَدِ وَقْتًا وَاحِدًا، وَكَذَلِكَ رُوِيَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاص مِنْ حَدِيثِ حَسَّانَ بْنِ عَطِيَّةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ عَنْ جَدِّه عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-394.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




மேலும் பார்க்க: புகாரி-521 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.