தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4180

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று நபர்களை (அல்லாஹ்வின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நெருங்கமாட்டார்கள்.

1 . இறைமறுப்பாளரின் உடல்.

2 . (பெண்கள் பயன்படுத்தும்) குங்குமப்பூ (போன்றவை கலந்த) வாசனைகளை பூசிக்கொள்பவர்.

3 . பெருந்துடக்கு உடையவர். (உளூ செய்தாலே தவிர)

அறிவிப்பவர்: அம்மார் பின் யாஸிர் (ரலி)

(அபூதாவூத்: 4180)

حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ الْأُوَيْسِيُّ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ، عَنِ الْحَسَنِ بْنِ أَبِي الْحَسَنِ، عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

ثَلَاثَةٌ لَا تَقْرَبُهُمُ الْمَلَائِكَةُ: جِيفَةُ الْكَافِرِ، وَالْمُتَضَمِّخُ بِالْخَلُوقِ، وَالْجُنُبُ، إِلَّا أَنْ يَتَوَضَّأَ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4180.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3650.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-12711-ஹஸன் பஸரீ அவர்கள், அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை. (நூல்: தஹ்தீபுல் கமால் 6/95 ). எனவே இது முன்கதிஃயான அறிவிப்பாளர் தொடர் என்பதால் பலவீனமானதாகும்.
  • இந்தக்கருத்தில் வரும் மற்ற செய்திகளையும் இணைத்து அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் இந்த செய்தியை ஹஸன் தரம் என்று கூறியுள்ளார். (நூல்: அஸ்ஸஹீஹா-‌‌1804)
  • என்றாலும் சில ஆய்வாளர்கள் அனைத்து செய்திகளையும் பலவீனமானது என்று கூறுகின்றனர்.

1 . இந்தக் கருத்தில் அம்மார் பின் யாஸிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • யஹ்யா பின் யஃமர் —> அம்மார் பின் யாஸிர் (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-681 , முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-1087 , 7936 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-17681 , அஹ்மத்-18886 , அபூதாவூத்-2254176 , 4601 , திர்மிதீ-613 , முஸ்னத் பஸ்ஸார்-1402 , முஸ்னத் அபீ யஃலா-1635 , குப்ரா பைஹகீ-982 , 8972 ,

  • ஹஸன் பஸரீ —> அம்மார் பின் யாஸிர் (ரலி)

பார்க்க: அபூதாவூத்- 4180 , குப்ரா பைஹகீ-8974 ,

  • அல்முஃஜமுல் அவ்ஸத்-2695 ,
  • குப்ரா பைஹகீ-8973 ,

2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு அபீ ஷைபா-17678 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.