தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4192

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அபூ தாலிபின் மகன் ஜஃபர் (ரலி) மரணித்த பின் மூன்று நாட்கள் நபி (ஸல்) அவர்கள் அவகாசம் எடுத்துக் கொண்டார்கள். பின்னர் ஜஃபரின் குடும்பத்தாரிடம் வந்தார்கள். ‘இன்றைய தினத்துக்குப் பின் என் சகோதரருக்காக அழக் கூடாது’ எனக் கூறினார்கள்.

‘என் சகோதரரின் புதல்வர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்’ என்றார்கள். நாங்கள் பறவைக் குஞ்சுகள் போல (தலைமுடி சீர் செய்யப்படாமல்) கொண்டு வரப்பட்டோம். உடனே நாவிதரை அழைத்து வரச் செய்து எங்கள் தலையை மழிக்குமாறு கட்டளையிட்டனர்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி)

(அபூதாவூத்: 4192)

بَابٌ فِي حَلْقِ الرَّأْسِ

حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ، وَابْنُ الْمُثَنَّى، قَالَا: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي، قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ أَبِي يَعْقُوبَ، يُحَدِّثُ عَنِ الْحَسَنِ بْنِ سَعْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْهَلَ آلَ جَعْفَرٍ ثَلَاثًا أَنْ يَأْتِيَهُمْ، ثُمَّ أَتَاهُمْ، فَقَالَ: «لَا تَبْكُوا عَلَى أَخِي بَعْدَ الْيَوْمِ»، ثُمَّ قَالَ: «ادْعُوا لِي بَنِي أَخِي»، فَجِيءَ بِنَا كَأَنَّا أَفْرُخٌ، فَقَالَ: «ادْعُوا لِي الْحَلَّاقَ»، فَأَمَرَهُ فَحَلَقَ رُءُوسَنَا


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-3660.
Abu-Dawood-Shamila-4192.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3662.




இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-1750 , அபூதாவூத்-4192 , நஸாயீ-5227 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.