(அறியாமைக் காலத்தில் நாங்கள் வணங்கி வந்த எங்கள்) சிலைகள் இருந்த இடத்திலேயே (அவைகளை அகற்றிவிட்டு) தாயிஃப் பள்ளிவாசலை அமைத்துக் கொள்ளுமாறு எனக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: உஸ்மான் பின் அபுல்ஆஸ் (ரலி)
(அபூதாவூத்: 450)حَدَّثَنَا رَجَاءُ بْنُ الْمُرَجَّى، حَدَّثَنَا أَبُو هَمَّامٍ الدَّلَّالُ مُحَمَّدُ بْنُ مُحَبَّبٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ السَّائِبِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عِيَاضٍ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَمَرَهُ أَنْ يَجْعَلَ مَسْجِدَ الطَّائِفِ حَيْثُ كَانَ طَوَاغِيتُهُمْ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-450.
Abu-Dawood-Alamiah-380.
Abu-Dawood-JawamiulKalim-379.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
…
- இதன் அறிவிப்பாளர்களில் வரும் ராவீ-40532-முஹம்மது பின் அப்துல்லாஹ் பின் இயாள் என்பவரின் நம்பகத்தன்மை பற்றி அறியப்படவில்லை. (இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் மட்டுமே இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார்) - மேலும் இவரிடமிருந்து ஸயீத் பின் ஸாயிப் என்பவர் மட்டுமே தனித்து அறிவிப்பதால் இவர் அறியப்படாதவர் ஆவார்.
- இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரை மக்பூல் என்ற தரத்தில் கூறியுள்ளார்.
(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/613, தக்ரீபுத் தஹ்தீப்-1/864)
(மக்பூல் தரம் என்றால் இவர் அறிவித்த செய்தியை வேறு அறிவிப்பாளர் அறிவித்திருந்தால் ஏற்றுக்கொள்ளலாம்; இல்லாவிட்டால் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற கருத்தாகும். ஆனால் இவர் அறிவிக்கும் செய்தியை வேறு யாரும் அறிவிக்காததால் இது பலவீனமான செய்தியாகும்)
(இந்த செய்தியை சரியானது என்று வைத்துக்கொண்டாலும் இதில் எந்த பிரச்சனையும் இல்லை. அந்த சிலைகள் இருந்த இடத்திற்கு உரிமையாளர்கள் அவர்களே! எனவே அவர்களாக விரும்பி பள்ளிவாசலாக மாற்றிக்கொண்டால் அதை யாரும் கேட்கமுடியாது)
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-743 , அபூதாவூத்-450 , முஸ்னத் பஸ்ஸார்-2327 , அல்முஃஜமுல் கபீர்-8355 , ஹாகிம்-6591 , குப்ரா பைஹகீ-4307 ,
…
இந்த ஹதீஸ் சஹீஹா?
இது பலவீனமான செய்தியாகும்.