தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4718

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(நரக) நெருப்பில்” என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்றபோது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, “என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில்தான் (இருக்கிறார்கள்)” என்று கூறினார்கள்.

(அபூதாவூத்: 4718)

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ،

أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَيْنَ أَبِي؟ قَالَ: «أَبُوكَ فِي النَّارِ» فَلَمَّا قَفَّى قَالَ: «إِنَّ أَبِي وَأَبَاكَ فِي النَّارِ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4718.
Abu-Dawood-Alamiah-4095.
Abu-Dawood-JawamiulKalim-4097.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . மூஸா பின் இஸ்மாயீல்

3 . ஹம்மாத் பின் ஸலமா

4 . ஸாபித் பின் அஸ்லம்

5 . அனஸ் (ரலி)


மேலும் பார்க்க: முஸ்லிம்-347.

2 comments on Abu-Dawood-4718

  1. சில வார்த்தை வித்தியாசத்துடன்
    ☞அபீ யஃலா➖3516
    ☞அபூ தாவூத்➖4718
    ☞பஸ்ஸார்➖6806
    ☞அஹ்மத்➖13834
    ☞இப்னு ஹிப்பான்➖5556
    ☞பைஹகீ குப்ரா➖14078
    ☞பைஹகீ – தலாஇலுன் நுபுவ்வஹ்➖191/1

    போன்ற நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது

    நீங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ள கிதாபுகளில் كتاب مستخرج أبي عوانة – ط المعرفة
    விடுபட்டது ஏன்❓

  2. அஸ்ஸலாமு அலைக்கும்.

    அபூஅவானா என்று முஸ்லிம்-347 இன் அடிக்குறிப்பில் உள்ளது. பார்க்கவும்.

    அனைத்து நூல்களின் செய்திகளையும் எல்லா ஹதீஸ்களிலும் பதிவிடவேண்டிய தேவை இருக்காது. எல்லா நூல்களிலும் ஒரே வகை அறிவிப்பாளர்தொடர் மட்டுமே இடம்பெற்றுள்ளது என்றால் சில நூல்களின் செய்திகளை மட்டுமே நாம் இங்கு பதிவிடுவோம். அனைத்தையும் பதிவிட்டால் அந்த ஒரு செய்திக்கே அதிக நாட்கள் தேவைப்படும்.

    விரிவாக ஆய்வு செய்ய வேண்டிய ஹதீஸ்களை பதிவு செய்யும்போது மட்டுமே அனைத்து அறிவிப்பாளர்தொடர்களையும் கூறவேண்டிய தேவை உள்ளது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.