அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சபையிலிருந்து எழுந்திருக்க விரும்பினால் கடைசியாக, “சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக்க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்த்த அஸ்தக்ஃபிருக்க வஅதூபு இலைக்க
(யா அல்லாஹ்! நீ தூய்மையானவன். உன் புகழைக்க கொண்டு உன்னைப் புகழ்கின்றேன். உன்னைத் தவிர வேறெந்த கடவுளும் இல்லை என்று தெரிவிக்கின்றேன். உன்னிடத்தில் மன்னிப்பு தேடி உன்னிடமே திரும்புகின்றேன்)”
என்று சொல்பவர்களாக இருந்தனர். அப்போது ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! கடந்த காலத்தில் சொல்லாத வார்த்தையை சொல்கின்றீர்களே?” என்று கேட்ட போது, “அது சபையில் ஏற்பட்டவைகளுக்குப் பரிகாரமாகும்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூபர்ஸா அல் அஸ்லமி (ரலி)
(அபூதாவூத்: 4859)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ الْجَرْجَرَائِيُّ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ الْمَعْنَى، أَنَّ عَبْدَةَ بْنَ سُلَيْمَانَ، أَخْبَرَهُمْ عَنِ الْحَجَّاجِ بْنِ ديِنَارٍ، عَنْ أَبِي هَاشِمٍ، عَنْ أَبِي الْعَالِيَةَ، عَنْ أَبِي بَرْزَةَ الْأَسْلَمِيِّ، قَالَ:
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: بِأَخَرَةٍ إِذَا أَرَادَ أَنْ يَقُومَ مِنَ الْمَجْلِسِ: «سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ» فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ لَتَقُولُ قَوْلًا مَا كُنْتَ تَقُولُهُ فِيمَا مَضَى، فَقَالَ: «كَفَّارَةٌ لِمَا يَكُونُ فِي الْمَجْلِسِ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4217.
Abu-Dawood-Shamila-4859.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-4219.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-11297-ஹஜ்ஜாஜ் பின் தீனார் என்பவர் பற்றி சிலர் பலமானவர் என்றும், சிலர் ஸதூக், லா பஃஸ பிஹீ-சுமாரானவர் என்றும் கூறியுள்ளர். (இந்தக் கருத்தில்) தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்களும் இவர் அந்தளவிற்கு பலமானவர் அல்ல என்று கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/358, தக்ரீபுத் தஹ்தீப்-1/223)
இந்தக் கருத்தில் அபூபர்ஸா அல்அஸ்லமி (ரலி) வழியாக வரும் செய்திகளில் சிலவை முத்தஸிலாகவும், சிலவை அபூபர்ஸா அல்அஸ்லமி (ரலி) அவர்கள் விடுப்பட்டு முர்ஸலாகவும் வந்துள்ளது…
இவற்றில் முர்ஸலாக அறிவிப்பவர்களே மிக பலமானவர்கள் என்பதால் இந்த அறிவிப்பாளர்தொடர் முர்ஸல் என்பதே உண்மை என்று அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அபூஸுர்ஆ ஆகியோர் கூறியுள்ளனர்.
(நூல்: இலலுல் ஹதீஸ்-1999)
3 . இந்தக் கருத்தில் அபூபர்ஸா அல் அஸ்லமி (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அபூஹாஷிம் —> அபூபர்ஸா (ரலி)
பார்க்க: அஹ்மத்-19769 ,
- அபூஹாஷிம் —> அபுல் ஆலியா —> அபூபர்ஸா (ரலி)
பார்க்க: அஹ்மத்-19812 , தாரிமீ-2700 , அபூதாவூத்-4859 , முஸ்னத் பஸ்ஸார்-3848 , குப்ரா நஸாயீ-10187 , முஸ்னத் அபீ யஃலா-7426 , ஹாகிம்-1971 , …
கூடுதல் தகவல் சேர்க்க வேண்டியுள்ளது…
மேலும் பார்க்க: நஸாயீ-1344 .
சமீப விமர்சனங்கள்