அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமின் மானம் பறிக்கப்படும் போது, அவரின் மரியாதைக்கு பங்கம் ஏற்படும்போது எவர் உதவி செய்யாமல் இருந்துவிடுவாரோ அவருக்கு அல்லாஹ்வின் உதவி தேவைப்படும் போது, அல்லாஹ் தன் உதவியைவிட்டும் அவரைத் தடுத்துவிடுகிறான்.
மேலும், ஒரு முஸ்லிமின் மானம் பறிக்கப்படும் போது, அவரின் மரியாதைக்கு பங்கம் ஏற்படும்போது எவர் உதவி செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ்வின் உதவி தேவைப்படும் போது, அல்லாஹ் அவருக்கு உதவிசெய்கிறான்.
அறிவிப்பவர்கள்: ஜாபிர் (ரலி), அபூதல்ஹா (ரலி)
(அபூதாவூத்: 4884)
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ سُلَيْمٍ، أَنَّهُ سَمِعَ إِسْمَاعِيلَ بْنَ بَشِيرٍ يَقُولُ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، وَأَبَا طَلْحَةَ بْنَ سَهْلٍ الْأَنْصَارِيَّ يَقُولَانِ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَا مِنَ امْرِئٍ يَخْذُلُ امْرَأً مُسْلِمًا فِي مَوْضِعٍ تُنْتَهَكُ فِيهِ حُرْمَتُهُ وَيُنْتَقَصُ فِيهِ مِنْ عِرْضِهِ، إِلَّا خَذَلَهُ اللَّهُ فِي مَوْطِنٍ يُحِبُّ فِيهِ نُصْرَتَهُ، وَمَا مِنَ امْرِئٍ يَنْصُرُ مُسْلِمًا فِي مَوْضِعٍ يُنْتَقَصُ فِيهِ مِنْ عِرْضِهِ وَيُنْتَهَكُ فِيهِ مِنْ حُرْمَتِهِ، إِلَّا نَصَرَهُ اللَّهُ فِي مَوْطِنٍ يُحِبُّ نُصْرَتَهُ»
قَالَ يَحْيَى: وَحَدَّثَنِيهِ عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، وَعُقْبَةُ بْنُ شَدَّادٍ، قَالَ أَبُو دَاوُدَ: ” يَحْيَى بْنُ سُلَيْمٍ، هَذَا هُوَ ابْنُ زَيْدٍ مَوْلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِسْمَاعِيلُ بْنُ بَشِيرٍ مَوْلَى بَنِي مَغَالَةَ، وَقَدْ قِيلَ: عُتْبَةُ بْنُ شَدَّادٍ مَوْضِعَ عُقْبَةَ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4884.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-4242.
- இதன் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வரும் யஹ்யா பின் ஸுலைம் அறியப்படாதவர் என்பதாலும்,
- இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் ஒன்றில் வரும் உக்பா பின் ஷத்தாத் பலவீனமானவர் என்பதாலும், மற்றொன்றில் வரும் இஸ்மாயீல் பின் பஷீர் அறியப்படாதவர் என்பதாலும், இது பலவீனமான அறிவிப்பாளர் தொடர்களாகும்.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க : அஹ்மத்-16368 , அபூதாவூத்-4884 , அல்முஃஜமுல் அவ்ஸத்-8642 , அல்முஃஜமுல் கபீர்-4735 , குப்ரா பைஹகீ-16682 , 16683 , ஷுஅபுல் ஈமான்-7226 ,
சமீப விமர்சனங்கள்