ஹதீஸ் எண்-495 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. என்றாலும் இதில்,
“நீங்கள் உங்கள் அடிமைப் பெண்ணைத் தன் அடிமை(யான ஆணு)க்கோ தன்னிடம் வேலை பார்க்கும் ஒருவருக்கோ மணம் முடித்து வைத்தால், அந்தப் பெண்ணைத் தொப்புளுக்குக் கீழ்முதல் முழங்காலுக்கு மேல்வரை உள்ள உடல் பகுதியைப் பார்க்கக்கூடாது என்று நபி (ஸல்) கூறினார்கள்” என்று கூடுதலாக
இடம்பெற்றுள்ளது.
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
(இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும்) வகீஃஉ அவர்கள், தனக்கு இந்தச் செய்தியை அறிவித்தவரின் பெயரை தாவூத் பின் ஸவ்வார் என்று தவறாக அறிவித்துள்ளார். இந்தச் செய்தியை அறிவிக்கும் அபூதாவூத் அத்தயாலிஸீ அவர்கள் தனது ஆசிரியரின் பெயரை அபூஹம்சா ஸவ்வார் அஸ்ஸைரஃபீ என்று கூறியுள்ளார்.
(குறிப்பு: அபூதாவூத் அவர்கள், இவரின் சரியான முழுப் பெயரை அபூதாவூத்-4114 இல் கூறியுள்ளார்)
(அபூதாவூத்: 496)حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنِي دَاوُدُ بْنُ سَوَّارٍ الْمُزَنِيُّ، بِإِسْنَادِهِ وَمَعْنَاهُ وَزَادَ:
«وَإِذَا زَوَّجَ أَحَدُكُمْ خَادِمَهُ عَبْدَهُ أَوْ أَجِيرَهُ، فَلَا يَنْظُرْ إِلَى مَا دُونَ السُّرَّةِ وَفَوْقَ الرُّكْبَةِ»
قَالَ أَبُو دَاوُدَ: وَهِمَ وَكِيعٌ فِي اسْمِهِ، وَرَوَى عَنْهُ أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ هَذَا الْحَدِيثَ، فَقَالَ: حَدَّثَنَا أَبُو حَمْزَةَ سَوَّارٌ الصَّيْرَفِيُّ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-496.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்