அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஏழுவயதை அடைந்ததும் உங்களுடைய குழந்தைகளை தொழுமாறு உத்தரவிடுங்கள். அவர்கள் பத்து வயதை அடைந்து விடும் போது தொழுகையை விட்டதற்காக அடியுங்கள். படுக்கையைத் தனியாக்கிவிடுங்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
(அபூதாவூத்: 495)حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ يَعْنِي الْيَشْكُرِيَّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ سَوَّارٍ أَبِي حَمْزَةَ – قَالَ أَبُو دَاوُدَ: وَهُوَ سَوَّارُ بْنُ دَاوُدَ أَبُو حَمْزَةَ الْمُزَنِيُّ الصَّيْرَفِيُّ – عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«مُرُوا أَوْلَادَكُمْ بِالصَّلَاةِ وَهُمْ أَبْنَاءُ سَبْعِ سِنِينَ، وَاضْرِبُوهُمْ عَلَيْهَا، وَهُمْ أَبْنَاءُ عَشْرٍ وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-418.
Abu-Dawood-Shamila-495.
Abu-Dawood-Alamiah-418.
Abu-Dawood-JawamiulKalim-417.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
..
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-18853-ஸவ்வார் பின் தாவூத்-அபூஹம்ஸா பஸரீ, முஸ்னீ, அஸ்ஸைரஃபீ என்பவர் பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் பலமானவர் என்றும், - அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், இவர் பஸராவைச் சார்ந்தவர். பஸராவைச் சேர்ந்தோர் இவரை பலமானவர் என்று கூறியுள்ளனர். இவரிடம் பிரச்சனையில்லை என்றும் கூறியுள்ளனர். - இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியிருப்பதுடன் இவர் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார். (இதற்கு காரணம் சில செய்திகளை இவர் தனித்து அறிவித்துள்ளார் என்பதால் ஆகும்.) - இவர் மற்றவர்கள் அறிவிக்காத செய்திகளை அறிவித்துள்ளார். எனவே இவரின் செய்திகளை இஃதிபார்-மற்ற வழிகளில் வந்துள்ளாதா என்று பார்க்க வேண்டும் என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் கூறியுள்ளார். - தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் இவரை உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அவர்களும் வேறு சிலரும் சிறிது பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இவர் விடப்பட்டவர் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். (எனவே தான் இவரிடம் ضعف – சிறிது பலவீனம் உள்ளது என்று தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
கூறியுள்ளார்.) - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் ஸதூக் தரத்தில், சிறிது தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-4/272, அஸ்ஸிகாத்-6/422, தஹ்தீபுல் கமால்-12/236 , அல்இக்மால்-6/157, மீஸானுல் இஃதிதால்-3611, தாரீகுல் இஸ்லாம்-4/261, அல்காஷிஃப்-2/551, தஹ்தீபுத் தஹ்தீப்-2/130, தக்ரீபுத் தஹ்தீப்-1/422)
இவரை இப்னுமயீன், அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
ஆகிய முக்கிய ஹதீஸ்கலை அறிஞர்கள் பாராட்டியுள்ளனர் என்பதால் இவரை பலமானவர் என்றும் முடிவு செய்யலாம். இருந்தாலும் மற்ற அறிஞர்களின் விமர்சனம் இருப்பதால் குறைந்த பட்சம் இவர் ஹஸன் தரத்தில் உள்ளவர்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث ஆவார்.
இந்தக் கருத்து ஸப்ரா பின் மஅபத் (ரலி) வழியாகவும் வந்துள்ளது என்பதால் இது ஸஹீஹ் லிஃகைரிஹீ என்ற தரத்தை அடையும்.
2 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- தொழுகைச் சட்டம்
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-3482 , அஹ்மத்-6689 , அபூதாவூத்-495 , ஹாகிம்-708 , குப்ரா பைஹகீ-5092 ,
- அடிமைப் பெண்ணின் சட்டம்
பார்க்க: அஹ்மத்-6756 , அபூதாவூத்-496 , 4113 , 4114 , தாரகுத்னீ-887 , 888 , குப்ரா பைஹகீ-3219 , 3220 , 3233 , 3234 , 3235 , 3236 ,
மேலும் பார்க்க: அபூதாவூத்-494 .
//ஸவ்வார் பின் தாவூத் என்பவர் நம்பகமானவர் என்று இமாம் இப்னு மயீன் கூறியுள்ளார்//
இமாம் இப்னு மயீன் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளாரே! அது ஏன் ஏற்கப்படவில்லை?
அஸ்ஸலாமு அலைக்கும்.
இப்னு மயீன் பலமானவர் என்றும், அஹ்மத் இமாம் சுமாரானவர் என்றும் கூறியுள்ளனர். என்றாலும் இப்னு ஹிப்பான் தவறிழைப்பவர் என்று விமர்சித்துள்ளார், உகைலீ அவர்களும் விமர்சித்துள்ளார். மேலும் தாரகுத்னீ அவர்கள் இவரின் அறிவிப்பை ஆய்வு செய்து விமர்சித்துள்ளார்.
விமர்சனம் விளக்கமாக இருப்பதால் சிலர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். சிலர் இவரை ஹஸன் தரத்தில் உள்ளவர் என்று கூறுகின்றனர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
இந்த பலவீனமான ஹதீஸ்கள் நான் என் முகநூல் பக்கத்தில் பதிவிட விரும்புகிறேன் பலபேர் பலஹீனமான ஹதீஸை கொண்டு அமல் செய்து வருகிறார்கள் அவர்கள் அதை விட்டு விலகி இருக்க ஒரு வாய்ப்பாக அமையும் என்று நினைக்கிறேன் உங்கள் இணையத்தளம் வழியாக காப்பி போஸ்ட் எடுத்துக் கொள்ள எனக்கு அனுமதி தேவை தடை ஏதும் இருப்பின் தெரியப்படுத்தவும் உங்கள் பதிலை எதிர்பார்த்து அவனாக
வஅலைக்கும் ஸலாமு வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
பயன்படுத்துங்கள் ஜி, மறக்காமல் அதன் கீழே இந்த இணையதள லிங்கை பதிவிடுங்கள்.
இந்த செய்தி குழந்தைகளுக்கு இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமையை கட்டளையிட வேண்டும்
என்று கூறுகிறது.
இந்த செய்தி இல்லாவிட்டாலும் நாம் கட்டளையிட வேண்டும் குழந்தைகளுக்கு
இன்ஷா அல்லா ஜி கண்டிப்பாக உங்கள் இணையதளம் பெயரை பதிவிடுவேன் ஏதாவது விமர்சனங்கள் வந்தால் எந்த ஹதிஸ்க்கு வருகிறதோ அந்த ஹதீஸுக்கு நான் கமெண்ட் செய்வேன்