தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-498

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 170

(பாங்கு எனும்) தொழுகை அறிவிப்பு துவங்கிய வரலாறு.

தொழுகைக்காக மக்களை எப்படி ஒன்று சேர்ப்பது என்ற ஆலோசனையில் நபி (ஸல்) அவர்கள் இறங்கினார்கள். தொழுகை நேரம் வந்ததும் கொடியேற்றுங்கள். இதை மக்கள் கண்டவுடன் ஒருவர் இன்னொருவருக்கு அறிவித்து விடுவார் என்று அவர்களிடம் தெரிவிக்கப் பட்டது. இது அவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை.

ஊதுகுழல் ஊதலாம் என்று அவர்களிடம் தெரிவிக்கப் பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் இது யூதர்களின் வழக்கம் என்று சொன்னார்கள். கொட்டு (நஹரா) அடிக்கலாம் என்று தெரிவிக்கப் பட்டதும் இது கிறித்தவர்களின் வழக்கம் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய இந்த கவலையை தன் மனதில் கொண்டவராக அப்துல்லாஹ் பின் ஸைத் பின் அப்து ரப்பிஹ் (ரலி) அவர்கள் (அந்த சபையிலிருந்து) கிளம்பி வீடு திரும்பினார்.

அவருடைய கனவில் பாங்கின் வாசகம் கூறப்பட்டது. மறுநாள் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அவர் வந்து இதை தெரிவித்தார். அவர், அல்லாஹ்வின் தூதரே! நான் உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையில் இருக்கும் போது என்னிடம் ஒருவர் வந்து, இந்த பாங்கின் வாசகத்தை (சொல்லி) காட்டினார் என்று குறிப்பிட்டார்.

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களும் இதற்கு முன்பே இதைக் கனவில் கண்டிருந்தார்கள். ஆனால் அதை இருபது நாட்களாக வெளியே கூறாமல் மறைத்து விட்டிருந்தார். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் இதை அவர் தெரிவித்தார். அவரிடம், நீ ஏன் இதை என்னிடம் தெரிவிக்கவில்லை என நபி (ஸல்) அவர்கள் கேட்டதும் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) எனக்கு முந்தி (தெரிவித்து) விட்டார். அதனால் எனக்கு வெட்கமாக இருந்தது என்று பதில் சொன்னார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பிலாலே! எழுந்திருங்கள்! அப்துல்லாஹ் பின் ஸைத் சொல்வதை போல் அப்படியே செய்யுங்கள் என்று சொன்னார்கள். (அது போல்) பிலால் (ரலி) அவர்கள் பாங்கு கூறினார்.

அறிவிப்பவர்கள்: அபூஉமைர் பின் அனஸ் (ரஹ்) அவர்களின் தந்தை வழி உறவினர்களான சில அன்ஸாரி நபித்தோழர்கள்.

இந்தச் செய்தியை ஹுஷைம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸியாத் பின் அய்யூப் அவர்கள், (ஊதுகுழல் என்று வெறுமனே சொல்லாமல்) யூதர்களின் ஊதுகுழல் என்று அறிவித்துள்ளார்.

அபூஉமைர் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூபிஷ்ர் அவர்கள் கூறியதாவது:

அன்றைய தினம் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் நோயாளியாக இல்லையெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரையே முஅத்தினாக நியமித்திருப்பார்கள் என்று அன்ஸாரிகள் கருத்து தெரிவித்தனர் என அபூஉமைர் (ரஹ்) அவர்கள் எனக்கு தெரிவித்தார்.

(அபூதாவூத்: 498)

170 – بَابُ بَدْءِ الْأَذَانِ

حَدَّثَنَا عَبَّادُ بْنُ مُوسَى الْخُتَّلِيُّ، وَزِيَادُ بْنُ أَيُّوبَ، وَحَدِيثُ عَبَّادٍ أَتَمُّ، قَالَا: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي بِشْرٍ، قَالَ زِيَادٌ: أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ أَبِي عُمَيْرِ بْنِ أَنَسٍ، عَنْ عُمُومَةٍ لَهُ مِنَ الْأَنْصَارِ، قَالَ

اهْتَمَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلصَّلَاةِ كَيْفَ يَجْمَعُ النَّاسَ لَهَا، فَقِيلَ لَهُ: انْصِبْ رَايَةً عِنْدَ حُضُورِ الصَّلَاةِ فَإِذَا رَأَوْهَا آذَنَ بَعْضُهُمْ بَعْضًا، فَلَمْ يُعْجِبْهُ ذَلِكَ، قَالَ: فَذُكِرَ لَهُ الْقُنْعُ – يَعْنِي الشَّبُّورَ وَقَالَ زِيَادٌ: شَبُّورُ الْيَهُودِ – فَلَمْ يُعْجِبْهُ ذَلِكَ، وَقَالَ: «هُوَ مِنْ أَمْرِ الْيَهُودِ» قَالَ: فَذُكِرَ لَهُ النَّاقُوسُ، فَقَالَ: «هُوَ مِنْ أَمْرِ النَّصَارَى» فَانْصَرَفَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدِ بْنِ عَبْدِ رَبِّهِ وَهُوَ مُهْتَمٌّ لِهَمِّ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأُرِيَ الْأَذَانَ فِي مَنَامِهِ، قَالَ: فَغَدَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرَهُ، فَقَالَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَبَيْنَ نَائِمٍ وَيَقْظَانَ، إِذْ أَتَانِي آتٍ فَأَرَانِي الْأَذَانَ، قَالَ: وَكَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَدْ رَآهُ قَبْلَ ذَلِكَ فَكَتَمَهُ عِشْرِينَ يَوْمًا، قَالَ: ثُمَّ أَخْبَرَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُ: «مَا مَنَعَكَ أَنْ تُخْبِرَنِي؟»، فَقَالَ: سَبَقَنِي عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ، فَاسْتَحْيَيْتُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا بِلَالُ، قُمْ فَانْظُرْ مَا يَأْمُرُكَ بِهِ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ، فَافْعَلْهُ» قَالَ: فَأَذَّنَ بِلَالٌ،

قَالَ أَبُو بِشْرٍ: فَأَخْبَرَنِي أَبُو عُمَيْرٍ، أَنَّ الْأَنْصَارَ تَزْعُمُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ، لَوْلَا أَنَّهُ كَانَ يَوْمَئِذٍ مَرِيضًا لَجَعَلَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُؤَذِّنًا


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-498.
Abu-Dawood-Alamiah-420.
Abu-Dawood-JawamiulKalim-419.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . அப்பாத் பின் மூஸா, 3 . ஸியாத் பின் அய்யூப்

4 . ஹுஷைம் பின் பஷீர்

5 . ஜஃபர் பின் இயாஸ்-அபூபுஷ்ர்

6 . அபூஉமைர்-அப்துல்லாஹ் பின் அனஸ் (ரஹ்)

7 . சில அன்ஸாரி நபித்தோழர்கள் (ரலி)


நபித்தோழர்கள் யார் எனக் கூறப்படாவிட்டாலும் இதில் குறையில்லை.


2 . இந்தக் கருத்தில் சில அன்ஸாரி நபித்தோழர்கள் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-498 , ஃகரீபுல் ஹதீஸ்-அல்கத்தாபீ-, குப்ரா பைஹகீ-,


மேலும் பார்க்க: புகாரி-604 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.