ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் தூக்கத்திலிருந்து விழித்தால், “லா இலாஹ இல்லா அன்த்த, ஸுப்ஹானக, அல்லாஹும்ம அஸ்தஃக்ஃபிருக லிதம்பீ, வ அஸ்அலுக ரஹ்மதக, அல்லாஹும்ம ஸித்னீ இல்மா, வலா துஸிஃக் கல்பீ பஃத இத் ஹதைத்தனீ, வ ஹப்லீ மில்லதுன்க ரஹ்மஹ், இன்னக அன்த்தல் வஹ்ஹாப்” என்று கூறுவார்கள்.
(பொருள்: அல்லாஹ்வே! உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். அல்லாஹ்வே! எனது பாவத்திற்காக உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன். உனது அருளை உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வே! எனது கல்வியை அதிகப்படுத்துவாயாக! எனக்கு நீ நேர்வழி காட்டிய பின் எனது உள்ளத்தைப் பிறழச் செய்துவிடாதே! உன்னிடமிருந்து எனக்கு அருளை வழங்குவாயாக! நிச்சயமாக நீயே மகா கொடையாளி.)
(அபூதாவூத்: 5061)حَدَّثَنَا حَامِدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا سَعِيدٌ يَعْنِي ابْنَ أَبِي أَيُّوبَ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ الْوَلِيدِ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا،
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا اسْتَيْقَظَ مِنَ اللَّيْلِ قَالَ: «لَا إِلَهَ إِلَّا أَنْتَ، سُبْحَانَكَ، اللَّهُمَّ أَسْتَغْفِرُكَ لِذَنْبِي، وَأَسْأَلُكَ رَحْمَتَكَ، اللَّهُمَّ زِدْنِي عِلْمًا، وَلَا تُزِغْ قَلْبِي بَعْدَ إِذْ هَدَيْتَنِي، وَهَبْ لِي مِنْ لَدُنْكَ رَحْمَةً، إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-5061.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்