தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-510

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் அதான் (வார்த்தைகள்) இரண்டு இரண்டு தடவையாகவும் இகாமத் (வார்த்தைகள்) ஒரு தடவையாகவும் அமைந்து இருந்தது. ஆனால், கத் காமத்திஸ் ஸலாத் – கத் காமத்திஸ் ஸலாத் என இரு தடவை சொல்வர். இகாமத்தை செவியுற்றதும் நாங்கள் உலூச் செய்து பிறகு பள்ளிக்கு புறப்படுவோம் என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

அபூ ஜஃபர் என்பாரிடமிருந்து இந்த ஹதீஸைத் தவிர வேறெதையும் நான் செவியுறவில்லை என்று ஷுஃபர் தெரிவிக்கின்றார்.

(அபூதாவூத்: 510)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ أَبَا جَعْفَرٍ، يُحَدِّثُ عَنْ مُسْلِمٍ أَبِي الْمُثَنَّى، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ

إِنَّمَا كَانَ الْأَذَانُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّتَيْنِ، مَرَّتَيْنِ وَالْإِقَامَةُ مَرَّةً، مَرَّةً غَيْرَ أَنَّهُ، يَقُولُ: قَدْ قَامَتِ الصَّلَاةُ، قَدْ قَامَتِ الصَّلَاةُ، فَإِذَا سَمِعْنَا الْإِقَامَةَ تَوَضَّأْنَا، ثُمَّ خَرَجْنَا إِلَى الصَّلَاةِ “، قَالَ شُعْبَةُ: لَمْ أَسْمَعْ مِنْ أَبِي جَعْفَرٍ غَيْرَ هَذَا الْحَدِيثِ


AbuDawood-Tamil-510.
AbuDawood-Shamila-510.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.