முஅத்தினின் அதானை நீங்கள் செவியுற்றால் அதைப் போன்றே நீங்களும் சொல்லுங்கள். பிறகு என் மீது சலவாத் சொல்லுங்கள் ஏனெனில் என் மீது ஒரு தடவை சலவாத் சொல்பவருக்கு அல்லாஹ் பத்து தடவை அருள் புரிகின்றான். பிறகு மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்விடம் எனக்காக வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சுவனத்தில் உள்ள ஒரு அந்தஸ்தாகும். அது அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்கே தவிர வேறு யாருக்கும் கிடைக்காது. அதை நானே பெறக் கூடியவன் என்று நம்புகின்றேன். எனக்காக யார் வஸீலாவைக் கேட்கின்றாரோ அவருக்கு எனது பரிந்துரை உறுதியாகி விட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் அம்ர் பின்அல் ஆஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதீ, முஸ்லிம், நஸயீ ஆகிய நூல்களிலும் பதிவாகியுள்ளது.)
(அபூதாவூத்: 523)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنِ ابْنِ لَهِيعَةَ، وَحَيْوَةَ، وَسَعِيدِ بْنِ أَبِي أَيُّوبَ، عَنْ كَعْبِ بْنِ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
«إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ ثُمَّ صَلُّواعَلَيَّ، فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً، صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا، ثُمَّ سَلُوا اللَّهَ عَزَّ وَجَلَّ لِي الْوَسِيلَةَ، فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الْجَنَّةِ لَا تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ تَعَالَى، وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ، فَمَنْ سَأَلَ اللَّهَ لِي الْوَسِيلَةَ، حَلَّتْ عَلَيْهِ الشَّفَاعَةُ»
AbuDawood-Tamil-523.
AbuDawood-Shamila-523.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்