தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-628

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள்.

பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான்.

பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)


இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம்: 4

(முஸ்லிம்: 628)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ، عَنْ حَيْوَةَ، وَسَعِيدِ بْنِ أَبِي أَيُّوبَ، وَغَيْرِهِمَا عَنْ كَعْبِ بْنِ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ

«إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ، فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ ثُمَّ صَلُّوا عَلَيَّ، فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى الله عَلَيْهِ بِهَا عَشْرًا، ثُمَّ سَلُوا اللهَ لِيَ الْوَسِيلَةَ، فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الْجَنَّةِ، لَا تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللهِ، وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ، فَمَنْ سَأَلَ لِي الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ»


Muslim-Tamil-628.
Muslim-TamilMisc-577.
Muslim-Shamila-384.
Muslim-Alamiah-577.
Muslim-JawamiulKalim-582.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம்

2 . முஹம்மத் பின் ஸலமா-அல்முராதீ

3 . அப்துல்லாஹ் பின் வஹ்ப்

4 . ஹய்வா பின் ஷுரைஹ், 5 . ஸயீத் பின் மிக்லாஸ்-ஸயீத் பின் அபூஅய்யூப், 6 . வேறுசிலர்

7 . கஅப் பின் அல்கமா

8 . அப்துர்ரஹ்மான் பின் ஜுபைர்

9 . அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)


இந்தச் செய்தி பாங்கின் போது கடைப்பிடிக்கவேண்டிய நற்செயல்களைப் பற்றி கூறுகிறது. பாங்கின் துஆக்கள் குறித்து வந்துள்ள மற்ற செய்திகளுக்கு இது விளக்கமாகவும் உள்ளது.


1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • கஅப் பின் அல்கமா —> அப்துர்ரஹ்மான் பின் ஜுபைர் —>  அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா- 2357, அஹ்மத்- 6568, முஸ்லிம்-628, அபூதாவூத்-523, திர்மிதீ-3614, முஸ்னத் பஸ்ஸார்- 2453 , குப்ரா நஸாயீ- 1654, 9790, நஸாயீ-678, இப்னு குஸைமா- 418, முஸ்தக்ரஜ் அபூஅவானா-983, ஷரஹ் மஆனில் ஆஸார்- 878, இப்னு ஹிப்பான்- 1690, 1691, 1692, அல்முஃஜமுல் அவ்ஸத்- 9335, குப்ரா பைஹகீ- 1930, 1931, 1932, …


பார்க்க: இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-,

 


 


பாங்குடன் தொடர்புடைய துஆக்கள்:

1 . தொழுகை அறிவிப்பாளர் கூறுவதைப் போன்று கூறுதல்.

பார்க்க: புகாரி-611, முஸ்லிம்-628,


2 . தொழுகை அறிவிப்பாளர் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் கூறும் போது கூறவேண்டியவை:

பார்க்க: திர்மிதீ-210.

தொழுகை அறிவிப்பாளர் கூறுவதைப் போன்று கூற வேண்டும் என்ற செய்தியை விட இதில் கூடுதல் தகவல் உள்ளது.


3 . தொழுகை அறிவிப்பாளர் ஹய்ய அலஸ்ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ் கூறும்போது லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் கூறுவது.

பார்க்க: முஸ்லிம்-629.


4 . பாங்கு முடிந்த பின்பு ஸலவாத் கூறுவது.

பார்க்க: முஸ்லிம்-628,


5 . பாங்கு முடிந்த பின்பு வஸீலா கேட்பது.

பார்க்க: புகாரி-614, முஸ்லிம்-628,


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.