மினாவில் நாங்கள் தொழுகைக்காக தயாராக நின்றோம். இமாம் வராததால் எங்களில் சிலர் உட்கார்ந்து கொண்டிருந்தனர். கூபாவைச் சேர்ந்த ஓர் அறிஞர் நீங்கள் ஏன் உட்கார்ந்து இருக்கின்றீர்கள்! என என்னிடம் வினவிய போது இது தான் சமூத் (இமாம் வருமுன் எழுந்து நிற்பது) ஆகும் என இப்னு புரைதா சொன்னார் என பதில் சொன்னேன். உடனே அவர் பர்ரா பின் ஆஸிப் வழியாக அப்துற் றஹ்மான் பின் அவஸஜா வழியாக அறிவித்ததாவது : –
தக்பீர் சொல்வதற்கு முன்னால் நீண்ட நேரம் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வரிசைகளில் நின்று கொண்டிருப்போம் என்றும் மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் முதல் வரிசைகளில் நிற்பவர்கள் மீது அருள் மாரி பொழிகிறார்கள். (தொழுகையின்) வரிசையில் வந்தடைவதற்காக நடந்து வரும் போது எடுத்து வைக்கும் அடிதான் அல்லாஹ்விற்கு விருப்பமான அடியாகும் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்றும் பர்ரா பின் ஆஸிப் (ரலி) அறிவித்தார்.
(அபூதாவூத்: 543)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ سُوَيْدِ بْنِ مَنْجُوفٍ السَّدُوسِيُّ، حَدَّثَنَا عَوْنُ بْنُ كَهْمَسٍ، عَنْ أَبِيهِ كَهْمَسٍ، قَالَ:
قُمْنَا إِلَى الصَّلَاةِ بِمِنًى وَالْإِمَامُ لَمْ يَخْرُجْ فَقَعَدَ بَعْضُنَا، فَقَالَ لِي شَيْخٌ مِنْ أَهْلِ الْكُوفَةِ: مَا يُقْعِدُكَ؟ قُلْتُ: ابْنُ بُرَيْدَةَ، قَالَ: هَذَا السُّمُودُ: فَقَالَ لِي الشَّيْخُ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْسَجَةَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ: «كُنَّا نَقُومُ فِي الصُّفُوفِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَوِيلًا قَبْلَ أَنْ يُكَبِّرَ»، قَالَ: وَقَالَ: «إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الَّذِينَ يَلُونَ الصُّفُوفَ الْأُوَلَ، وَمَا مِنْ خُطْوَةٍ أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ خُطْوَةٍ يَمْشِيهَا يَصِلُ بِهَا صَفًّا»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-543.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்