தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-612

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 214

மூன்று பேர்களாக இருந்தால் எப்படி நிற்பது என்பது பற்றிய பாடம்.

என்னுடைய பாட்டி மலைகா தான் செய்து வைத்திருந்த உணவை உண்ண அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைத்திருந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த உணவை சாப்பிட்டார்கள். பிறகு எழுங்கள். நான் உங்களுக்கு தொழுவிக்கின்றேன் என்று சொன்னார்கள். நான் நீண்ட காலமாக புழங்கியதின் காரணமாக கருப்பேறிய பாயை கொண்டு வரச் சென்று அதில் தண்ணீர் தெளித்தேன். அந்த பாயில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றார்கள். நானும் ஓர் அநாதையும் அவர்களுக்கு பின்னாலும், அந்த மூதாட்டி எங்களுக்கு பின்னாலும் வரிசையாக நின்றோம். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுது விட்டு திரும்பிச் சென்றார்கள் என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(அபூதாவூத்: 612)

214- بَابُ إِذَا كَانُوا ثَلَاثَةً كَيْفَ يَقُومُونَ

حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ

أَنَّ جَدَّتَهُ مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ صَنَعَتْهُ فَأَكَلَ مِنْهُ، ثُمَّ قَالَ: «قُومُوا فَلَأُصَلِّيَ لَكُمْ»، قَالَ أَنَسٌ: فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ فَنَضَحْتُهُ بِمَاءٍ «فَقَامَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَفَفْتُ أَنَا وَالْيَتِيمُ وَرَاءَهُ، وَالْعَجُوزُ مِنْ وَرَائِنَا فَصَلَّى لَنَا رَكْعَتَيْنِ، ثُمَّ انْصَرَفَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


AbuDawood-Tamil-612.
AbuDawood-Shamila-612.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.