அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குத் தொழ வைத்துக் கொண்டிருந்த போது தன்னுடைய செருப்புகளைக் கழற்றி இடது புறத்தில் வைத்தார்கள். இதை (தொழுது கொண்டிருந்த) அக்கூட்டம் பார்த்த போது அவர்களும் தங்களது காலணிகளை எடுத்து வைத்து விட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த பின்பு, ‘உங்களுடைய காலணிகளை கழற்றி வைக்க உங்களை எது தூண்டியது?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘நீங்கள் உங்களது காலணிகளைக் கழற்றி வைப்பதை நாங்கள் பார்த்தோம். ஆகையால் எங்களது காலணிகளை நாங்கள் கழற்றி விட்டோம்’ என்று கூறினார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘ஜிப்ரீல் (அலை) என்னிடம் வந்து எனது காலணிகளில் அசுத்தம் அல்லது நோவினை இருப்பதாகச் சொன்னார்கள்’ என்று கூறி விட்டு, ‘உங்களில் யாரேனும் பள்ளிவாசலுக்கு வந்தால் (தன் காலணிகளை) அவர் உற்று நோக்கட்டும். தன்னுடைய காலணிகளில் அசுத்தத்தையோ அல்லது நோவினை தரக் கூடியதையோ அவர் பார்த்தால் அதைத் துடைத்து விட்டு அத்துடன் தொழுது கொள்ளட்டும்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)
(அபூதாவூத்: 650)حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي نَعَامَةَ السَّعْدِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ:
بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِأَصْحَابِهِ إِذْ خَلَعَ نَعْلَيْهِ فَوَضَعَهُمَا عَنْ يَسَارِهِ، فَلَمَّا رَأَى ذَلِكَ الْقَوْمُ أَلْقَوْا نِعَالَهُمْ، فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ، قَالَ: «مَا حَمَلَكُمْ عَلَى إِلْقَاءِ نِعَالِكُمْ»، قَالُوا: رَأَيْنَاكَ أَلْقَيْتَ نَعْلَيْكَ فَأَلْقَيْنَا نِعَالَنَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ جِبْرِيلَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَانِي فَأَخْبَرَنِي أَنَّ فِيهِمَا قَذَرًا – أَوْ قَالَ: أَذًى – ” وَقَالَ: ” إِذَا جَاءَ أَحَدُكُمْ إِلَى الْمَسْجِدِ فَلْيَنْظُرْ: فَإِنْ رَأَى فِي نَعْلَيْهِ قَذَرًا أَوْ أَذًى فَلْيَمْسَحْهُ وَلْيُصَلِّ فِيهِمَا
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-555.
Abu-Dawood-Shamila-650.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-554.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
- அபூநள்ரா —> அபூஸயீத் (ரலி)
பார்க்க : அஹ்மத்-11153 , 11877 , தாரிமீ-1418 , அபூதாவூத்-650 , இப்னு குஸைமா-786 , 1017 , இப்னு ஹிப்பான்-2185 , ஹாகிம்-955 ,
- அய்யூப் —> இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
—> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க : முஸ்னத் பஸ்ஸார்-9884 , அல்முஃஜமுல் அவ்ஸத்-8735 ,
- அய்யூப் —> ஒரு மனிதர் —> அபூஸயீத் (ரலி)
பார்க்க : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-1516 ,
சமீப விமர்சனங்கள்