பாடம் : 35
தண்ணீர் தீட்டாகாது.
நபி (ஸல்) அவர்கள் மனைவியரில் ஒருவர், வாய் அகன்ற பாத்திரத்தில் குளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் உலூச் செய்வதற்காக, அல்லது குளிப்பதற்காக வந்த போது அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் குளிப்பு கடமை யானவளாக இருந்தேன் என்று அவர்கள் கூற தண்ணீர் தண்ணீரை தீட்டாக்கி விடாது என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
(குறிப்பு: திர்மிதீ, இப்னுமாஜா, தாரமி, ஹாகிம், ரஸீன், அஹ்மத், நஸயீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
(அபூதாவூத்: 68)35- بَابُ الْمَاءِ لَا يُجْنِبُ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، حَدَّثَنَا سِمَاكٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ
اغْتَسَلَ بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَفْنَةٍ، فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَتَوَضَّأَ مِنْهَا أَوْ يَغْتَسِلَ، فَقَالَتْ: لَهُ يَا رَسُولَ اللَّهِ، إِنِّي كُنْتُ جُنُبًا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْمَاءَ لَا يُجْنِبُ»
AbuDawood-Tamil-68.
AbuDawood-Shamila-68.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்