ஹதீஸ் எண்-90 இல்வரும் செய்தி இந்த அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.
இதில், “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டுள்ள ஒருவர் மலஜலம் கழிக்க வேண்டியது ஏற்பட்டால் அதை வெளியாக்கி தன் வயிற்றை இலகுவாக்கும் வரை தொழக்கூடாது” என்று இதே வார்த்தையில் இந்த ஹதீஸ் தொடர்கிறது.
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிற எவரும் ஒரு கூட்டத்தினருக்கு அவர்களின் அனுமதியின்றி தொழுகை வைக்க அனுமதி இல்லை. மேலும் பிரார்த்தனையில் அவர்களைத் தவிர்த்துவிட்டு தனக்காக மட்டும் பிரார்த்திப்பது கூடாது. அவ்வாறு செய்தால் அவர், அவர்களுக்கு துரோகமிழைத்தவராவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
இதன் அறிவிப்பாளர்களில் (அபூஹுரைரா-ரலி அவர்களைத் தவிர) மற்றவர்கள் சிரியா (ஷாம்) நாட்டு அறிவிப்பாளர்களாகும். வேறு யாரும் இதில் சம்பந்தப்படவில்லை.
(அபூதாவூத்: 91)حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ السُّلَمِيُّ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا ثَوْرٌ، عَنْ يَزِيدَ بْنِ شُرَيْحٍ الْحَضْرَمِيِّ، عَنْ أَبِي حَيٍّ الْمُؤَذِّنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«لَا يَحِلُّ لِرَجُلٍ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ يُصَلِّيَ وَهُوَ حَقِنٌ حَتَّى يَتَخَفَّفَ» – ثُمَّ سَاقَ نَحْوَهُ عَلَى هَذَا اللَّفْظِ قَالَ: «وَلَا يَحِلُّ لِرَجُلٍ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ يَؤُمَّ قَوْمًا إِلَّا بِإِذْنِهِمْ، وَلَا يَخْتَصُّ نَفْسَهُ بِدَعْوَةٍ دُونَهُمْ، فَإِنْ فَعَلَ فَقَدْ خَانَهُمْ»
قَالَ أَبُو دَاوُدَ: «هَذَا مِنْ سُنَنِ أَهْلِ الشَّامِ لَمْ يُشْرِكْهُمْ فِيهَا أَحَدٌ»
Abu-Dawood-Tamil-83.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-91.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-83.
சமீப விமர்சனங்கள்