தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-90

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

மூன்று ‎காரியங்களைச் செய்ய உங்களில் எவருக்கும் அனுமதி இல்லை.

1 . ‎(ஒரு கூட்டத்தினருக்கு) தொழுகை நடத்துபவர் பிரார்த்தனை செய்யும் போது தமக்கு மட்டும் கேட்டுக்கொள்கிறார். (அவர்களை தனது பிரார்த்தனையில் இணைக்கவில்லை). அப்படி செய்தால் ‎அவர், அவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டார்.

2 . ஒரு வீட்டில் நுழைய அனுமதி ‎பெறுவதற்கு முன்பு, அவ்வீட்டின் உட்பகுதிகளை அவர் பார்க்கக் கூடாது. அவ்வாறு ‎அவர் பார்த்து விட்டால் (அனுமதி பெறாமலேயே) வீட்டில் நுழைந்தவர் போலாவார். ‎

3 . மலஜலத்தை வெளியாக்கி தன் வயிற்றை இலகுவாக்கும் வரை, அதை அடக்கிக் கொண்டு தொழக்கூடாது.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)

(அபூதாவூத்: 90)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا ابْنُ عَيَّاشٍ، عَنْ حَبِيبِ بْنِ صَالِحٍ، عَنْ يَزِيدَ بْنِ شُرَيْحٍ الْحَضْرَمِيِّ، عَنْ أَبِي حَيٍّ الْمُؤَذِّنِ، عَنْ ثَوْبَانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

ثَلَاثٌ لَا يَحِلُّ لِأَحَدٍ أَنْ يَفْعَلَهُنَّ: لَا يَؤُمُّ رَجُلٌ قَوْمًا فَيَخُصُّ نَفْسَهُ بِالدُّعَاءِ دُونَهُمْ، فَإِنْ فَعَلَ فَقَدْ خَانَهُمْ، وَلَا يَنْظُرُ فِي قَعْرِ بَيْتٍ قَبْلَ أَنْ يَسْتَأْذِنَ، فَإِنْ فَعَلَ فَقَدْ دَخَلَ، وَلَا يُصَلِّي وَهُوَ حَقِنٌ حَتَّى يَتَخَفَّفَ


Abu-Dawood-Tamil-83.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-90.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-83.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மத் பின் ஈஸா, ஹபீப் பின் ஸாலிஹ் ஆகியோர் பலமானவர்கள்; ஸவ்பான் (ரலி) அவர்கள் நபித்தோழர் என்பதால் இவர்களைப் பற்றி விமர்சனம் இல்லை.
  • இஸ்மாயீல் பின் அய்யாஷ், யஸீத் பின் ஷுரைஹ், அபூஹைய் அல்முஅத்தின் (ஷத்தாத் பின் ஹைய்) ஆகியோர் சுமாரானவர்கள்.

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-48942-யஸீத் பின் ஷுரைஹ் அல்ஹள்ரமீ அல்ஹிம்ஸீ என்பவர் பற்றி யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 83
    அவர்கள் இவர் ஷாம் நாட்டின் நல்லோர்களில் ஒருவர் என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள், இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார்.
  • தாரகுத்னீ  அவர்கள் இவரின் செய்திகளை மற்றவர்களின் செய்திகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
  • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள் இவர் நல்லோர்களில் உள்ள ஒரு பலமானவர் என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவரை மக்பூல் எனும் தரத்தில் கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்காஷிஃப்-4/516, தஹ்தீபுத் தஹ்தீப்-4/417, தக்ரீபுத் தஹ்தீப்-1/1076)

இந்தச் செய்தியின் முதல் பகுதி யஸீத் பின் ஷுரைஹ் என்பவர் வழியாகவே வந்துள்ளது. மற்ற இரு பகுதிகளின் கருத்து வேறு சில சரியான அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

(பார்க்க: புகாரி-5924 , முஸ்லிம்-969)


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர் பலவீனமானது என்பதற்கு காரணங்கள்:

1 . இந்தச் செய்தியின் முதல் பகுதியின் கருத்து வேறுசில சரியான ஹதீஸ்களுக்கு மாற்றமாக உள்ளது.

தொழுகையில் ஓதப்படும் எத்தனையோ பிராத்தனைகள் தனக்கு மட்டும் கேட்கும்படியே அமைந்துள்ளது. எனவே பிரார்த்தனை பற்றி வரும் ஹதீஸ்களுக்கு இது முரணாகும்…

2 . இதில் வரும் யஸீத் பின் ஷுரைஹ் என்பவர் சுமாரானவர் என்ற தரத்தில் உள்ளவர் என்பதுடன் இந்த செய்தி இவரிடமிருந்து பலதரப்பட்ட அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது என்பதாலும் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.


1 . இந்தக் கருத்தில் ஸவ்பான் (ரலி), அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) ஆகியோர் வழியாக வரும் செய்திகள்:

  • ஹபீப் பின் ஸாலிஹ் —> யஸீத் பின் ஷுரைஹ் —> அபூஹைய் அல்முஅத்தின் (ஷத்தாத் பின் ஹைய்) —> ஸவ்பான் (ரலி)

பார்க்க: அஹ்மத்-22415 , 22416 , அல்அதபுல் முஃப்ரத்-1093 , இப்னு மாஜா-619 , 923 , அபூதாவூத்-90 , திர்மிதீ-357 , முஸ்னத் பஸ்ஸார்-4180 , குப்ரா பைஹகீ-5350 ,

  • ஸவ்ர் பின் யஸீத் —> யஸீத் பின் ஷுரைஹ் —> அபூஹைய் அல்முஅத்தின் (ஷத்தாத் பின் ஹைய்) —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அபூதாவூத்-91 , குப்ரா பைஹகீ-5349 ,

  • ஸவ்ர் பின் யஸீத் —> யஸீத் பின் ஷுரைஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: ஹாகிம்-598 ,


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர்கள்:

யஸீத் பின் ஷுரைஹ்விடமிருந்து அறிவிப்பவர்கள்:

1 . ஹபீப் பின் ஸாலிஹ் (இவரிடமிருந்து 3 பேர் அறிவித்துள்ளனர்)

இஸ்மாயீல் பின் அய்யாஷ் (அபூதாவூத்-90)

இஸ்மாயீல் பின் அய்யாஷ் வழியாக வரும் செய்திகளில் முஸ்னத் ரூயானீ-650 வரும் செய்தியே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தியாகும். (இதில் துஆ பற்றி இல்லை. மக்களின் வெறுப்பை பெற்று அவருக்கு தொழுகை நடத்துவது பற்றி உள்ளது)

பகிய்யது பின் வலீத் (இப்னு மாஜா-619 , 923)

ஸஃப்வான் பின் அம்ர்…

2 . முஹம்மத் பின் வலீத்

அல்அதபுல் முஃப்ரத்-1093 ,

1 . எனவே ஹபீப் பின் ஸாலிஹ், முஹம்மத் பின் வலீத் ஆகியோர், யஸீத் பின் ஷுரைஹ் —> அபூஹைய் அல்முஅத்தின் (ஷத்தாத் பின் ஹைய்) —> ஸவ்பான் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.

இது முதல் அறிவிப்பாளர்தொடர்.

3 . அஸ்ஸஃப்ரு பின் நுஸைர். இவரிடமிருந்து 2 பேர் அறிவித்துள்ளனர்.

முஆவியா பின் ஸாலிஹ். இவர் அஸ்ஸஃப்ரு பின் நுஸைர் —> யஸீத் பின் ஷுரைஹ் —> அபூஉமாமா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.

இப்னு மாஜா-617 ,

அப்துல்லாஹ் பின் ரஜா. இவர் அஸ்ஸஃப்ரு பின் நுஸைர் —> ளம்ரா பின் ஹபீப் —> அபூஉமாமா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.

அல்முஃஜமுல் கபீர்-7505 ,

இவ்விரண்டில் முஆவியா பின் ஸாலிஹ் அவர்களின் அறிவிப்பே முன்னுரிமை பெற்றது. அப்துல்லாஹ் பின் ரஜா தவறு செய்துள்ளார். அல்லது இதை அஸ்ஸஃப்ரு பின் நுஸைர் குளறுபடியாக அறிவித்துள்ளார்.

இது 2 வது அறிவிப்பாளர்தொடர்.

4 . ஸவ்ர் பின் யஸீத்.

இவர் யஸீத் பின் ஷுரைஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.

இது 3 வது அறிவிப்பாளர்தொடர்.

இதனடிப்படையில் ஸவ்பான் (ரலி) வழியாக வரும் செய்தியே முன்னுரிமை பெற்றது. அதனால் தான் திர்மிதீ அவர்கள் அதை பிரபலமானது என்று கூறியுள்ளார்.


علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (8/ 280)
1568- وَسُئِلَ عَنْ حَدِيثٍ يُرْوَى عَنْ أَبِي حَيٍّ الْمُؤَذِّنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى الله عليه وسلم: لا يحل لامريء مُسْلِمٍ أَنْ يَنْظُرَ فِي بَيْتٍ، حَتَّى يَسْتَأْذِنَ، وَلَا يَحِلُّ أَنْ يُصَلِّي وَهُوَ حَاقِنٌ، وَلَا يحل أن يؤم قوما إِلَّا بِإِذْنِهِمْ، ولَا يَخُصُّ نَفْسَهُ بِدَعْوَةٍ، فَإِنْ فَعَلَ، فَقَدْ خَانَهُمْ.
فَقَالَ: يَرْوِيهِ يَزِيدُ بْنُ شَرِيحٍ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ ثَوْرُ بْنُ يَزِيدَ، عَنْ يَزِيدَ بْنِ شَرِيحٍ، عَنْ أَبِي حَيٍّ الْمُؤَذِّنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ ذَلِكَ أَصْبَغُ بن زيد، عن منصور، بن زَاذَانَ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ.
وَخَالَفَهُ عِيسَى بْنُ يُونُسَ فَرَوَاهُ عَنْ ثَوْرٍ، عَنْ شُرَحْبِيلَ بْنِ مُسْلِمٍ، عَنْ أَبِي حَيٍّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَوَهِمَ فِي قَوْلِهِ: شُرَحْبِيلُ بْنُ مُسْلِمٍ، وَإِنَّمَا أَرَادَ يَزِيدَ بْنَ شَرِيحٍ.وَخَالَفَهُ حَبِيبُ بْنُ صَالِحٍ فَرَوَاهُ عَنْ يَزِيدَ بْنِ شَرِيحٍ، عَنْ أَبِي حَيٍّ الْمُؤَذِّنِ، عَنْ ثَوْبَانَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
وَخَالَفَهُ مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ فَرَوَاهُ، عَنِ السَّفَرِ بْنِ نُسَيْرٍ، عَنْ يَزِيدَ بْنِ شَرِيحٍ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ذَلِكَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، وَابْنُ وَهْبٍ، وَزَيْدُ بْنُ الْحُبَابِ، عَنْ مُعَاوِيَةَ.
وَخَالَفَهُمْ مَعْنُ بْنُ عِيسَى فَرَوَاهُ عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنِ السَّفَرِ بْنِ نُسَيْرٍ، عَنْ يَزِيدَ بْنِ خُمَيْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لا يأتي أحدكم الصلاة وهو حقن، فَقَطْ وَوَهِمَ فِيهِ.
وَالصَّحِيحُ عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنِ السَّفَرِ، عَنْ يَزِيدَ بْنِ شَرِيحٍ، عَنْ أَبِي أُمَامَةَ، وَعَنْ حَبِيبِ بْنِ صَالِحٍ، عَنْ يَزِيدَ بْنِ شَرِيحٍ، عَنْ أَبِي حَيٍّ، عن ثوبان.

ஆனால் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் முஆவியா அவர்கள் அறிவிக்கும் அஸ்ஸஃப்ரு பின் நுஸைர் —> யஸீத் பின் ஷுரைஹ் —> அபூஉமாமா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரையும், ஹபீப் பின் ஸாலிஹ் அறிவிக்கும் யஸீத் பின் ஷுரைஹ் —> அபூஹைய் அல்முஅத்தின் (ஷத்தாத் பின் ஹைய்) —> ஸவ்பான் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரையும் உண்மையானது என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-1568)

யஸீத் பின் ஷுரைஹ்விடமிருந்து அறிவிக்கும் அஸ்ஸஃப்ர், ஸவ்ர் ஆகியோரில் ஸவ்ர் என்பவரே பலமானவர் என்றிருந்தாலும் முஆவியாவின் அறிவிப்பு முன்னுரிமை பெற்றது என்பதின் அடிப்படையிலும், அறிவிப்பாளர்கள் அனைவரும் ஷாம்வாசிகளாக இடம்பெற்றுள்ள அறிவிப்பாளர்தொடர் என்பதின்படியும் இவ்வாறு தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
கூறியுள்ளார். இது, இந்த பலவகை அறிவிப்பாளர்தொடர்களில் எது உண்மை, முன்னுரிமை பெற்றது என்பதின்படி கூறப்பட்ட தகவலாகும்.

ஆனால் இந்தச் செய்தியின் முதல் பகுதியின் கருத்து வேறுசில சரியான ஹதீஸ்களுக்கு மாற்றமாக உள்ளது என்பதால் பலவீனமானதாகும்.

இதனடிப்படையில் தான் இப்னு அப்துல்பர், இப்னு குஸைமா,பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
இப்னுல்முன்திர், இப்னு தைமிய்யா ஆகியோர் இந்தச் செய்தியின் முதல் பகுதியின் கருத்தை பலவீனமானது என்று கூறியுள்ளனர்.

(நூல்கள்: அல்இஸ்தித்கார்-2/297, அல்அவ்ஸத்-இப்னுல் முன்திர்-4/236, மஜ்மூஉல் ஃபதாவா-23/116-119)

திர்மிதீ இமாம் அவர்கள், இதை ஹஸன் தரம் என்று கூறிய காரணம் இதில் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர் இடம்பெறவில்லை என்பதால் ஆகும்.


சில செய்திகள் குர்ஆனுக்கு அல்லது சரியான ஹதீஸுக்கு மாற்றமாக இருந்தால் அதை இட்டுக்கட்டப்பட்டது என்று கூறக்கூடாது; வேறு காரணத்தால் பலவீனமானது என்று கூறினால் போதுமானது என்பதற்கு உதாரணமாக இந்தச் செய்தியை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் கூறிவிட்டு இந்தச் செய்தியை மற்ற செய்திகளுக்கு முரண்படாதவாறு பொருள் கொள்ளலாம்; அதாவது ஹதீஸில் கூறப்படாத பொதுவான பிரார்த்தனை செய்யும்போது தனக்கு மட்டும் கேட்கக்கூடாது; மற்றவர்களுக்கும் சேர்த்துக் கேட்கவேண்டும் என்று பொருள் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.

(நூல்: அன்னுகது அலா கிதாபி இப்னிஸ் ஸலாஹ்-2/846)



2 . அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-617 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.