இப்னு அபூஅதீக் (அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் அஸ்ஸித்தீக்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவரான காசிம் பின் முஹம்மத் பின் அப்திர் ரஹ்மானும் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஒரு விஷயம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். காசிம் (எதையும்) பிழையாகப் பேசுபவராக இருந்தார். அவரிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், “உனக்கு என்ன நேர்ந்தது? நீ ஏன் இந்த என் சகோதரர் புதல்வரைப் போன்று (பிழையின்றி) பேசுவதில்லை? இந்தப் பழக்கம் உனக்கு எங்கிருந்து வந்தது என்று நான் அறிந்துகொண்டேன். இவரை இவருடைய தாய் வளர்த்தார். உன்னை உன்னுடைய தாய் வளர்த்தார்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட காசிம் கோபம் கொண்டு, ஆயிஷா (ரலி) அவர்கள்மீது எரிச்சலடைந்தார். ஆயிஷா (ரலி) அவர்களுக்கு முன் உணவுத் தட்டு கொண்டுவரப்பட்டபோது காசிம் எழுந்துவிட்டார். ஆயிஷா (ரலி) அவர்கள், “எங்கே (போகிறாய்)?” என்று கேட்க, காசிம் “நான் தொழப்போகிறேன்” என்றார். ஆயிஷா (ரலி) அவர்கள், “உட்கார்!” என்றார்கள். காசிம் “நான் தொழப்போகிறேன்” என்று (மீண்டும்) கூறினார். ஆயிஷா (ரலி) அவர்கள் “அவசரக்காரனே! உட்கார்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உணவு வந்து காத்திருக்கும்போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டும் தொழக்கூடாது” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.
– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. ஆனால், அவற்றில் காசிம் பின் முஹம்மதைப் பற்றியக் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம்: 5
(முஸ்லிம்: 969)باب لا صلاة بحضرة طعام ولا وهو يدافعه الأَخبثان
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ، حَدَّثَنَا حَاتِمٌ هُوَ ابْنُ إِسْمَاعِيلَ، عَنْ يَعْقُوبَ بْنِ مُجَاهِدٍ، عَنِ ابْنِ أَبِي عَتِيقٍ، قَالَ
تَحَدَّثْتُ أَنَا وَالْقَاسِمُ، عِنْدَ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، حَدِيثًا وَكَانَ الْقَاسِمُ رَجُلًا لَحَّانَةً وَكَانَ لِأُمِّ وَلَدٍ، فَقَالَتْ لَهُ عَائِشَةُ: مَا لَكَ لَا تَحَدَّثُ كَمَا يَتَحَدَّثُ ابْنُ أَخِي هَذَا، أَمَا إِنِّي قَدْ عَلِمْتُ مِنْ أَيْنَ أُتِيتَ هَذَا أَدَّبَتْهُ أُمُّهُ، وَأَنْتَ أَدَّبَتْكَ أُمُّكَ، قَالَ: فَغَضِبَ الْقَاسِمُ وَأَضَبَّ عَلَيْهَا، فَلَمَّا رَأَى مَائِدَةَ عَائِشَةَ، قَدْ أُتِيَ بِهَا قَامَ، قَالَتْ: أَيْنَ؟ قَالَ: أُصَلِّي، قَالَتْ: اجْلِسْ، قَالَ: إِنِّي أُصَلِّي، قَالَتْ: اجْلِسْ غُدَرُ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا صَلَاةَ بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا هُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ»
-حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَابْنُ حُجْرٍ، قَالُوا: حَدَّثَنَا إِسْمَاعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ، أَخْبَرَنِي أَبُو حَزْرَةَ الْقَاصُّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي عَتِيقٍ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِمِثْلِهِ وَلَمْ يَذْكُرْ فِي الْحَدِيثِ قِصَّةَ الْقَاسِمِ
Muslim-Tamil-969.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-560.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-874.
1 . இந்த செய்தியின் கருத்தில் வரும் அறிவிப்பாளர்தொடர்களைக் கூறிய தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், இந்த செய்தியை அபூஹஸ்ரா (யஃகூப் பின் முஜாஹித்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர். இஸ்மாயீல் பின் ஜஃபர், முஹம்மது பின் ஜஃபர், ஸுலைமான் பின் பிலால், யஹ்யா பின் உமைர், ஸஃப்வான் பின் ஈஸா ஆகியோர் அபூஹஸ்ரா —> இப்னு அபூஅதீக் (அப்துல்லாஹ் பின் முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
2 . ஆனால் இவர்களுக்கு மாற்றமாக, ஹுஸைன் பின் அலீ அல்ஜுஃபீ என்பவர், அபூஹஸ்ரா —> காஸிம் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
3 . இவருக்கு மாற்றமாக யஹ்யா பின் அய்யூப் அவர்கள், அபூஹஸ்ரா —> காஸிம், இப்னு அபூஅதீக் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
யஹ்யா பின் உமைர் அவர்கள், தான் அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரில் அப்துல்லாஹ் பின் முஹம்மது யார் என்பதை தெளிவாக இப்னு அபூஅதீக் (அப்துல்லாஹ் பின் முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர்) என்று கூறியுள்ளார் என்பதால் இந்த மூன்று வகையான அறிவிப்பாளர்தொடரில் முதல் வகையே சரியானது என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-14/369)
- ஆனால் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இந்த மூன்று அறிவிப்பாளர்தொடர்களும் மஹ்ஃபூல் (முன்னுரிமை பெற்ற செய்திகள்) என்று கூறியுள்ளார்.
(மிஸ்ஸீ இமாம், இப்னு ஹஜர்,பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை) ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
ஆகியோரின் கருத்துக்களை பார்க்க: அபூதாவூத்-89)
1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அப்துல்லாஹ் பின் முஹம்மது (இப்னு அபூஅதீக்) —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: அஹ்மத்-24166 , 24270 , 24449 , முஸ்லிம்-969 , முஸ்னத் அபீ யஃலா-4804 , குப்ரா பைஹகீ-5026 , 5027 , 5037 ,
- அபூஹஸ்ரா —> அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அபூபக்ர் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: அபூதாவூத்-89 , இப்னு குஸைமா-933 , இப்னு ஹிப்பான்-2073 ,
- காஸிம் பின் முஹம்மது பின் அபூபக்ர் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-7940 , இப்னு ஹிப்பான்- 2074 , ஹாகிம்-599 ,
- ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
இறப்பு ஹிஜ்ரி 146
வயது: 85
—> உர்வா பின் ஸுபைர் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-2361 ,
2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-618 .
3 . மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-2824 .
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: …
சமீப விமர்சனங்கள்