அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரும் (மலம், ஜலம் போன்ற) இயற்கை உபாதை இருக்கும் நிலையில் தொழ வேண்டாம்.
அறிவிப்பவர்: மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)
(almujam-alawsat-2824: 2824)حَدَّثَنَا إِبْرَاهِيمُ قَالَ: نا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الشَّاذَكُونِيُّ قَالَ: نا مُحَمَّدُ بْنُ عُمَرَ الْوَاقِدِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ ابْنِ أَخِي الزُّهْرِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا يُصَلِّيَنَّ أَحَدُكُمْ وَهُوَ يَجِدُ مِنَ الْأَذَى شَيْئًا»
يَعْنِي الْغَائِطَ وَالْبَوْلَ
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنِ الزُّهْرِيِّ إِلَّا ابْنُ أَخِيهِ، تَفَرَّدَ بِهِ الْوَاقِدِيُّ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-2824.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-2908.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-41876-முஹம்மது பின் உமர் அல்வாகிதீ என்பவர் கல்வியாளர் என்று பெயர்பெற்றிருந்தாலும் இவரை பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று பல அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/656, தக்ரீபுத் தஹ்தீப்-1/882)
இவரைப் பற்றியுள்ள விரிவான தகவல்களைப் பார்க்கும் போது இவரைப் பற்றி சிலர் பலமானவர் என்றும், சிலர் பலவீனமானவர் என்றும், சிலர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர் என்றும், சிலர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும் விமர்சித்துள்ளனர். சிலர் இவர் கூறும் வரலாற்றுத் தகவல்கள், யுத்தம் சம்பந்தமான செய்திகள் போன்றவற்றை ஆதாரமாக ஏற்கலாம் என்றும் கூறியுள்ளனர்…
கூடுதல் தகவல் ஆய்வில்…
- மேலும் ராவீ-18301-ஸுலைமான் பின் தாவூத் அஷ்ஷாதகூனீ என்பவரும் ஹதீஸ்கலை அறிஞர்களால் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று விமர்சிக்கப்பட்டுள்ளார்.
(நூல்: லிஸானுல் மீஸான்-1/142)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
3 . இந்தக் கருத்தில் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-2824 , அல்முஃஜமுல் கபீர்-22 ,
மேலும் பார்க்க: முஸ்லிம்-969 .
சமீப விமர்சனங்கள்