ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரும் (மலம், ஜலம் போன்ற) இயற்கை உபாதை இருக்கும் நிலையில் தொழ வேண்டாம்.
அறிவிப்பவர்: மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 22)عُبَيْدُ اللهِ بْنُ عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ هَاشِمٍ الْبَغَوِيُّ، ثنا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الشَّاذَكُونِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ عُمَرَ الْواقِدِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ ابْنِ أَخِيِ الزُّهْرِيُّ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا يُصَلِّيَنَّ أَحَدُكُمْ وَهُوَ يَجِدُ مِنَ الْأَذَى شَيْئًا»
يَعْنِي الْغَائِطَ وَالْبَوْلَ
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-22.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-16481.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ முஹம்மது பின் உமர் அல்வாகிதீ என்பவர் கல்வியாளர் என்று பெயர்பெற்றிருந்தாலும் இவரை பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று பல அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்; இவ்வாறே ராவீ ஸுலைமான் பின் தாவூத் அஷ்ஷாதகூனீ என்பவரையும் அறிஞர்கள் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று விமர்சித்துள்ளனர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-2824 .
சமீப விமர்சனங்கள்