தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Khuzaymah-933

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

தொழுகையில் மலஜலத்தை அடக்கிக் கொண்டு தொழுவது பற்றி வந்துள்ள கண்டனம்.

933. நாங்கள் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களுடன் இருக்கும் போது அவர்களுக்கு உணவு ‎கொண்டு வரப்பட்டது. அப்போது (அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களின் பேரன்) காஸிம் ‎அவர்கள் தொழ எழுந்தார். அப்போது (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்கள், “உணவு ‎தயாராக இருக்கும் போதும், மலஜல உபாதைகளை அடக்கிக் கொண்டும் தொழக் கூடாது ‎என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்” எனக் ‎கூறினார்கள்.

அறிவிப்பவர்: (ரஹ்)

அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அபூபக்ர் (ரஹ்)

عبد الله بن محمد بن عقيل الهاشمي

அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அகீல் பற்றி பல ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

இப்னு மயீன், நஸாயீ போன்றோர் இவர் பலவீனமானவர் என்றும்,

இப்னு ஸஃத் இவர் நிராகரிக்கப்படவேண்டியவர் என்றும்,

அபூஹாதிம், இப்னு குஸைமா போன்றோர் இவர் ஹதீஸை நான் ஆதாரமாக எடுத்துக்கொள்ள மாட்டேன் என்றும்,

இப்னு உயைனா அவர்கள் குறைஷியர்களில் நான்கு பேரின் ஹதீஸ்கள் கைவிடப்பட்டன. அவர்களில் இவரும் ஒருவர் என்றும், இன்னும் பல அறிஞர்கள் இவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும் கூறியுள்ளனர்.

அஹ்மத், இஸ்ஹாக், ஹுமைதி போன்றோர் இவரின் ஹதீஸை ஆதாரமாக எடுத்துள்ளனர் என புகாரி இமாம் கூறியதாக திர்மிதீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் புகாரி இமாம் அவர்கள் இவரைப் பற்றி முகாரிபுல் ஹதீஸ் என்று கூறியுள்ளார்கள். (இதன் கருத்து பற்றி சிலர் இவர் மிக பலவீனமானவர் அல்ல. இவரின் ஹதீஸ் எழுதப்படும், தனித்து அறிவித்தால் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், சிலர் இதன் கருத்து ஹஸன் தரத்தில் உள்ளவர் என்றும் கூறியுள்ளனர்.)

(நூல்கள்: ...தஹ்தீபுத் தஹ்தீப்-2/424, ...)

எனவே இவர் தனித்து அறிவிக்கும் செய்திகள் ஆய்வுக்குரியவை ஆகும்.


* [3592] عبد الله بن محمد بن عقيل بن أبي طالب الهاشمي أبو محمد المدني أمه زينب بنت علي صدوق في حديثه لين ويقال تغير بأخرة من الرابعة مات بعد الأربعين بخ د ت ق

قلت: صالح الحديث: قال ابن معين "لا يحتج بحديثه" وأحمد بن حنبل "منكر الحديث" ويعقوب بن شيبة "وابن عقيل صدوق وفي حديثه ضعف شديد جدا" وكان ابن عيينة "أربعة من قريش يترك حديثهم فذكره فيهم" وابن خزيمة "لا أحتج به لسوء حفظه" والعجلي "جائز الحديث" وابن عدي "يكتب حديثه" والخطيب "كان سيء الحفظ" (تهذيب التهذيب 6/ 14). وقال ابن عبد البر "هو أوثق من كل من تكلم فيه" وتعقبه ابن حجر في تهذيبه وقال "وهذا إفراط".


بَابُ الزَّجْرِ عَنْ مُدَافَعَةِ الْغَائِطِ وَالْبَوْلِ فِي الصَّلَاةِ

نا بُنْدَارٌ، وَيَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، وَيَحْيَى بْنُ حَكِيمٍ، وَأَحْمَدُ بْنُ عَبْدَةَ قَالُوا ثنا يَحْيَى وَهُوَ ابْنُ سَعِيدٍ، نا أَبُو حَزْرَةَ وَهُوَ يَعْقُوبُ بْنُ مُجَاهِدٍ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ وَهُوَ ابْنُ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ قَالَ:

كُنَّا عِنْدَ عَائِشَةَ فَجِيءَ بِطَعَامٍ فَقَامَ الْقَاسِمُ يُصَلِّي، فَقَالَتْ عَائِشَةُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يُصَلَّى صَلَاةً بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ»


Ibn-Khuzaymah-Tamil-.
Ibn-Khuzaymah-TamilMisc-.
Ibn-Khuzaymah-Shamila-933.
Ibn-Khuzaymah-Alamiah-.
Ibn-Khuzaymah-JawamiulKalim-892.



  • இந்த அறிவிப்பாளர்தொடரில் அப்துல்லாஹ் பின் முஹம்மத் என்பவர் அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அபூபக்ர் அஸ்ஸித்தீக் ஆவார் என்று கூறுவது இந்த நூலின் ஆசிரியரான இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
    இறப்பு ஹிஜ்ரி 311
    வயது: 88
    அவர்களாகும். இந்தக் கருத்தில் யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    அவர்கள் வழியாக வரும் அறிவிப்பாளர்தொடர்களில் அப்துல்லாஹ் பின் முஹம்மத் என்று வந்திருப்பதே சரியானதாகும்.

மேலும் பார்க்க: முஸ்லிம்-969 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.