தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-95

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் (இரண்டு ராத்தல்) கொள்ளளவு கொண்ட பாத்திரத்தில் உலூச் ‎செய்தார்கள். ஒரு ஸாவு (இரண்டு கை கொள்ளளவு தண்ணீரின் நான்கு மடங்கு) ‎தண்ணீரில் குளிப்பார்கள் என அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.‎

இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்:-‎

இந்த ஹதீஸை ஷரீக் என்பார் வாயிலாக யஹ்யா பின் ஆதம் அறிவிக்கும்போது ‎‎(அப்துல்லாஹ் பின் ஜப்ர் என்பதற்கு பதிலாக) இப்னு ஜப்ர் பின் அதீக் எனக் ‎கூறியுள்ளர். அப்துல்லாஹ் பின் ஈஸா என்பார் வழியாக இதை சுஃப்யான் ‎அறிவிக்கும்போது எனக்கு ஜப்ர் பின் அப்துல்லாஹ் அறிவிக்கின்றார் எனக் ‎குறிப்பிட்டுள்ளர்.‎

மேலும் இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் : அப்துல்லாஹ் பின் ஜப்ர் ‎அவர்கள் அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டதாக ஷுஃபா அறிவிக்கின்றார். எனினும் ‎ஷுஃபா அவர்கள் இரண்டு ராத்தல்கள் எனக் குறிப்பிடாமல் நபி (ஸல்) அவர்கள் ஒரு ‎மக்கூக் அளவு தண்ணீரில் உலூச் செய்வார்கள் என அறிவிக்கிறார்.‎

மேலும் இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் : ‎

ஸாவு என்பது ஐந்து ராத்தல்கள் என இமாம் அஹ்மது பின் ஹன்பல் அவர்கள் கூற ‎நான் கேட்டிருக்கிறேன், இப்னு அபூதிஃப், என்பாரின் ஸாவு அளவும் நபி (ஸல்) ‎அவர்களின் ஸாவு அளவும் ஒன்றே எனவும் அபூதாவூத் கூறியுள்ளனர்.‎

‎(குறிப்பு: நஸயீ, அஹ்மது, முஸ்லிம், திர்மிதீ, தாரிமி போன்ற நூல்களிலும் இக்கருத்து ‎காணப்படுகிறது. மக்கூக் என்பது இரு கைகள் கொள்ளக்கூடிய அளவு என இப்னுல் ‎அஸீர் அவர்கள் தமது நிஹாயாவில் குறிப்பிடுகின்றார்.)‎

(அபூதாவூத்: 95)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّازُ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ، عَنْ أَنَسٍ، قَالَ

«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ بِإِنَاءٍ يَسَعُ رَطْلَيْنِ، وَيَغْتَسِلُ بِالصَّاعِ»

قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ يَحْيَى بْنُ آدَمَ، عَنْ شَرِيكٍ، قَالَ: عَنِ ابْنِ جَبْرِ بْنِ عَتِيكٍ، قَالَ: وَرَوَاهُ سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى، حَدَّثَنِي جَبْرُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ أَبُو دَاوُدَ: وَرَوَاهُ شُعْبَةُ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ، سَمِعْتُ أَنَسًا إِلَّا أَنَّهُ قَالَ: «يَتَوَضَّأُ بِمَكُّوكٍ» وَلَمْ يَذْكُرْ رَطْلَيْنِ، قَالَ أَبُو دَاوُدَ: وسَمِعْت أَحْمَدَ بْنَ حَنْبَلٍ، يَقُولُ: «الصَّاعُ خَمْسَةُ أَرْطَالٍ، وَهُوَ صَاعُ ابْنُ أَبِي ذِئْبٍ، وَهُوَ صَاعُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


AbuDawood-Tamil-95.
AbuDawood-Shamila-95.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.