தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-430

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

“உனது சமுதாயத்தின் மீது ஐந்து நேர தொழுகைகளை நான் விதியாக்கியிருக்கின்றேன். யார் ஐந்து நேர தொழுகைகளை அவற்றிற்குரிய நேரங்களில் பேணி தொழுது வருகின்றாரோ அவரை நான் சுவனத்தில் நுழைப்பேன் என்று என்னிடத்தில் ஒரு வாக்குறுதி உண்டு.

யார் அந்த தொழுகைகளை பேணவில்லையோ அவருக்கு என்னிடத்தில் எந்த வாக்குறுதியும் கிடையாது” என்று அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூகதாதா பின் ரிப்யீ (ரலி)

(அபூதாவூத்: 430)

حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ الْحَضْرَمِيُّ، حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ ضُبَارَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سُلَيْكٍ الْأَلْهَانِيِّ، أَخْبَرَنِي ابْنُ نَافِعٍ، عَنِ ابْنِ شِهَابٍ الزُّهْرِيِّ، قَالَ: قَالَ سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ: إِنَّ أَبَا قَتَادَةَ بْنَ رِبْعِيٍّ أَخْبَرَهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَالَ اللَّهُ تَعَالَى

«إِنِّي فَرَضْتُ عَلَى أُمَّتِكَ خَمْسَ صَلَوَاتٍ وَعَهِدْتُ عِنْدِي عَهْدًا أَنَّهُ مَنْ جَاءَ يُحَافِظُ عَلَيْهِنَّ لِوَقْتِهِنَّ أَدْخَلْتُهُ الْجَنَّةَ وَمَنْ لَمْ يُحَافِظْ عَلَيْهِنَّ فَلَا عَهْدَ لَهُ عِنْدِي»


AbuDawood-Tamil-430.
AbuDawood-Shamila-430.
AbuDawood-JawamiulKalim-365.




إسناد ضعيف فيه ضبارة بن عبد الله الشامي وهو ضعيف الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ளுபாரா பின் அபூ ஸலீல் பற்றி சிலர் பலவீனமானவர் என்றும், சிலர் அறியப்படாதவர் என்றும் கூறியுள்ளனர். எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
  • இவரின் பெயர் பல வார்த்தை அமைப்புகளில் வந்துள்ளது.
  1. ளுபாரா பின் அப்துல்லாஹ், 2. ளுபாரா பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    ஹழ்ரமீ, 3. ளுபாரா பின் அபூ ஸலீல், 4. ளுபாரா பின் அபூ ஸுலைக், 5. ளுபாரா பின் அப்துல்லாஹ் பின் அபூ ஸலீல், 6. ளுபாரா பின் அப்துல்லாஹ் பின் அபூ ஸுலைக். 7. ளுபாரா பின் அப்துல்லாஹ் பின் அபூ ஸுலைக் அல்ஹானீ, 8. அபூஷுரைஹ் ளுபாரா, 9. ளுபாரா .

مجهول
تقريب التهذيب: (1 / 457)

  • மேலும் பார்க்க : அபூதாவூத்-430 , இப்னு மாஜா-1403 , அல்முஃஜமுல் அவ்ஸத்-6807 ,
  • இந்தக் கருத்தில் சரியான ஹதீஸ்களும் உள்ளன.

பார்க்க : அஹ்மத்-22704 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.