தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Al-Adabul-Mufrad-260

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் முஸ்லிமாக ஆகாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) முஸ்லிமாக ஆக முடியாது.  உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள். அதனால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம்.

உங்களுக்கிடையே பகை ஏற்படுவதை விட்டு உங்களை எச்சரிக்கிறேன். அவை தான் மழித்துவிடக் கூடியது. அவை முடியை மழிக்கும் என்று நான் கூறவில்லை. மாறாக மார்க்கத்தை மழித்து விடும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரை (ரலி)

(al-adabul-mufrad-260: 260)

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ قَالَ: حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي أُسَيْدٍ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَا تَدْخُلُوا الْجَنَّةَ حَتَّى تُسْلِمُوا، وَلَا تُسْلِمُوا حَتَّى تَحَابُّوا، وَأَفْشُوا السَّلَامَ تَحَابُّوا، وَإِيَّاكُمْ وَالْبُغْضَةَ، فَإِنَّهَا هِيَ الْحَالِقَةُ، لَا أَقُولُ لَكُمْ: تَحْلِقُ الشَّعْرَ، وَلَكِنْ تَحْلِقُ الدِّينَ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ قَالَ: حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي أُسَيْدٍ مِثْلَهُ


Al-Adabul-Mufrad-Tamil-.
Al-Adabul-Mufrad-TamilMisc-.
Al-Adabul-Mufrad-Shamila-260.
Al-Adabul-Mufrad-Alamiah-.
Al-Adabul-Mufrad-JawamiulKalim-256.




إسناد ضعيف فيه جد إبراهيم بن أسيد البراد وهو مجهول

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் இப்ராஹீம் பின் உஸைத் அவர்களின் பாட்டனார் யார் என அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
  • இதன் முதல் பகுதியின் கருத்திலும் சரியான ஹதீஸ்கள் உள்ளன. (பார்க்க : முஸ்லிம்-93 )

சரியான ஹதீஸ் பார்க்க : திர்மிதீ-2509 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.