தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2509

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நோன்பு வைத்தல், தொழுதல், தர்மம் செய்தல் போன்றவற்றிற்கு கிடைக்கும் அந்தஸ்தைவிட சிறந்த ஒரு செயலை நான் உங்களுக்கு கூறட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘ஆம், கூறுங்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என நபித்தோழர்கள் பதில் கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அது  ‘உங்களுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்துவதுதான். உங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது மார்க்கத்தை சிதைத்து விடும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)

(திர்மிதி: 2509)

حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ الأَعْمَشِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الجَعْدِ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«أَلَا أُخْبِرُكُمْ بِأَفْضَلَ مِنْ دَرَجَةِ الصِّيَامِ وَالصَّلَاةِ وَالصَّدَقَةِ»، قَالُوا: بَلَى، قَالَ: «صَلَاحُ ذَاتِ البَيْنِ، فَإِنَّ فَسَادَ ذَاتِ البَيْنِ هِيَ الحَالِقَةُ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَيُرْوَى عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «هِيَ الحَالِقَةُ لَا أَقُولُ تَحْلِقُ الشَّعَرَ، وَلَكِنْ تَحْلِقُ الدِّينَ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2433.
Tirmidhi-Shamila-2509.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2446.




  • அஃமஷ் (ரஹ்) அவர்களிடமிருந்து அபூமுஆவியா அறிவிக்கும் செய்திகள் சரியானவையாகும். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1 / 840 )
  • இதனடிப்படையில் இந்த செய்தியை அல்பானி,பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    போன்றோர் சரியான செய்தி என்று கூறியுள்ளனர். (தஃலீக் அர்னாவூத்-முஸ்னத் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    27508)

1 . இந்தக் கருத்தில் அபுத்தர்தா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : திர்மிதீ-2509 , அஹ்மத்-27508 , அல்அதபுல் முஃப்ரத்-391 , 412 , அபூதாவூத்-4919 , இப்னு ஹிப்பான்-5092 ,

2. ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : மாலிக்-2632 ,

3 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : திர்மிதீ-2508 , அல்அதபுல் முஃப்ரத்-260 , முஸ்னத் பஸ்ஸார்-8482 ,

4 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : அல்முஃஜமுல் கபீர்-14615 , 14653 ,

மேலும் பார்க்க : திர்மிதீ-2510 .

work – أَلَا أُخْبِرُكُمْ بِأَفْضَلَ مِنْ دَرَجَةِ .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.