தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Al-Adabul-Mufrad-312

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

குறைசொல்பவனாக, சபிப்பவனாக, கெட்ட செயல் செய்பவனாக, கெட்ட வார்த்தைகள் பேசுபவனாக இறைநம்பிக்கையாளன் இருக்க மாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

(al-adabul-mufrad-312: 312)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنِ الْحَسَنِ بْنِ عَمْرٍو، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ، وَلَا اللِّعَانِ، وَلَا الْفَاحِشِ وَلَا الْبَذِيءِ»


Al-Adabul-Mufrad-Tamil-.
Al-Adabul-Mufrad-TamilMisc-.
Al-Adabul-Mufrad-Shamila-312.
Al-Adabul-Mufrad-Alamiah-.
Al-Adabul-Mufrad-JawamiulKalim-310.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-1833-அபூபக்ர் பின் அய்யாஷ் பற்றி இப்னு முபாரக் பாராட்டியுள்ளார். இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    பலமானவர் என்று கூறியுள்ளார். இப்னு நுமைர் பிறப்பு ஹிஜ்ரி 115
    இறப்பு ஹிஜ்ரி 199
    வயது: 84
    அவர்கள் இவர் அஃமஷ் வழியாக அறிவிப்பது பலலவீனமானது என்று கூறியுள்ளார். உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    அவர்கள் இவர் கூஃபாவாசிகளிடமிருந்து அறிவிக்கும் செய்திகளில் அதிகம் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்…
  • இவர் வயதான காலத்தில் ஞாபகமறதியால் சில செய்திகளை தவறாக அறிவித்ததால் இப்னுல் கத்தான், இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    போன்றோர் இவரை நினைவாற்றல் சரியில்லாதவர் என்று விமர்சித்துள்ளனர்.

(நூல்: அஸ்ஸிகாத்-7/668)

  • இந்த செய்தியில் இவர் தவறிழைக்க வில்லை என்பதால் இது சரியான செய்தியாகும்.

மேலும் பார்க்க: திர்மிதீ-1977 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.