தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Al-Adabul-Mufrad-69

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

(தனக்கு) அநியாயம் செய்யும் உறவினருடன் இணைந்து வாழ்வதின் சிறப்பு

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னை சொர்க்கத்தில் நுழையச் செய்யும் ஒரு அமலை எனக்கு அறிவியுங்கள்! என்று கேட்டார். அதற்கவர்கள், நீர் மிகச் சிறிய வார்த்தையைக் கூறினாலும் நிச்சயமாக மிகப் பெரிய செய்தியைக் கேட்டுவிட்டீர்! ஜீவன்களை உரிமை விடு! அடிமையை உரிமை விடு! என்றார்கள்.

அதற்கவர், இவ்விரண்டும் ஒன்றில்லையா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை, ஜீவன்களை உரிமை விடுவதென்பது நீ தனிப்பட்ட ரீதியில் அடிமையை உரிமை விடுவதாகும். ஃபக்குர் ரகபா என்பது அடிமை விடுதலை பெற அதற்குரிய கிரயத்தை நீ கொடுப்பதாகும் என்று பதிலளித்தார்கள்.

மேலும் பால் கொடுக்கும் கால்நடைகளை பிறருக்குக் கொடு! பிரிந்து வாழும் உறவினர்களுடன் இணைந்து வாழ்!

இதனைச் செய்ய உமக்கு சக்தியில்லை என்றால் நன்மையை ஏவு! தீமையைத் தடு!

இதற்கும் நீர் சக்தி பெறவில்லை என்றால் நன்மையைத் தவிர வேறு எதனையும் பேசாதவாறு உனது நாவை காத்துக் கொள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அல்பராஉ பின் ஆஸிப் (ரலி­)

(al-adabul-mufrad-69: 69)

بَابُ فَضْلِ مَنْ يَصِلُ ذَا الرَّحِمِ الظَّالِمَ

حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ طَلْحَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْسَجَةَ، عَنِ الْبَرَاءِ قَالَ:

جَاءَ أَعْرَابِيٌّ فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ، عَلِّمْنِي عَمَلًا يُدْخِلُنِي الْجَنَّةَ، قَالَ: «لَئِنْ كُنْتَ أَقَصَرْتَ الْخُطْبَةَ لَقَدْ أَعْرَضْتَ الْمَسْأَلَةَ، أَعْتِقِ النَّسَمَةَ، وَفُكَّ الرَّقَبَةَ» قَالَ: أَوَ لَيْسَتَا وَاحِدًا؟ قَالَ: «لَا، عِتْقُ النَّسَمَةِ أَنْ تَعْتِقَ النَّسَمَةَ، وَفَكُّ الرَّقَبَةِ أَنْ تُعِينَ عَلَى الرَّقَبَةِ، وَالْمَنِيحَةُ الرَّغُوبُ، وَالْفَيْءُ عَلَى ذِي الرَّحِمِ، فَإِنْ لَمْ تُطِقْ ذَلِكَ، فَأْمُرْ بِالْمَعْرُوفِ، وَانْهَ عَنِ الْمُنْكَرِ، فَإِنْ لَمْ تُطِقْ ذَلِكَ، فَكُفَّ لِسَانَكَ إِلَّا مِنْ خَيْرٍ»


Al-Adabul-Mufrad-Tamil-.
Al-Adabul-Mufrad-TamilMisc-.
Al-Adabul-Mufrad-Shamila-69.
Al-Adabul-Mufrad-Alamiah-.
Al-Adabul-Mufrad-JawamiulKalim-69.




மேலும் பார்க்க: அஹ்மத்-18647 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.