தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Alilal-Ibn-Abi-Hatim-642

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

இப்னு அபூஹாதிம் அவர்கள் கூறியதாவது:

அப்துர்ரஸ்ஸாக் அவர்கள், மஃமர் —> ஸைத் பின் அஸ்லம் —> அதாஉ பின் யஸார் (ரஹ்) —> அபூஸயீத் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் (கீழ்கண்ட) செய்தி பற்றி எனது தந்தை அபூஹாதிம் அவர்களிடமும், அபூஸுர்ஆ அவர்களிடமும் கேட்டேன்.


(ஐந்து நபர்களைத் தவிர வேறு எந்த செல்வந்தருக்கும் ஸகாத் பொருள் ஆகுமானதல்ல. (அவர்கள் யாரென்றால்)

1 . தனது செல்வத்தைக் கொடுத்து ஸகாத் பொருளை விலைக்கு வாங்கிக்கொண்டவர்.
2 . ஸகாத்தை வசூலிக்கும் பணியாளர்.
3 . கடன்பட்டவர்
4 . அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்.
5 . (ஏழையான) அண்டைவீட்டார் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஸகாத் பொருளை அந்த ஏழையிடமிருந்து அன்பளிப்பாக பெற்ற செல்வந்தர்.)


அதற்கு இரண்டு பேரும், இது தவறாகும். ஏனெனில் ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள், ஸைத் பின் அஸ்லம் —> ஒரு பலமானவர் —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். இது தான் சரியானதாகும்.

எனது தந்தை அபூஹாதிம் அவர்கள், “இதில் வரும் பலமானவர் ஏன் அதாஉ பின் யஸாராக இருக்கக்கூடாது? என்று யாரேனும் (நம்மிடம்) கேட்டால், “அதாஉ பின் யஸார் என்றால் அவரை ஏன் இவ்வாறு மூடலாக கூறவேண்டும்?. (தெளிவாக பெயரைக் கூறவேண்டியது தானே! மறைத்துக் கூறவேண்டிய அவசியமில்லையே) என்று அவருக்கு பதில் கூறப்படும்” என கூறினார்.

“இதில் வரும் பலமானவர் ஏன் அதாஉ பின் யஸாராக இருக்கக்கூடாது? என்று நான் அபூஸுர்ஆ அவர்களிடமும் கேட்டேன். அவரும், அதாஉ பின் யஸார் என்றால் அவரை இவ்வாறு மூடலாக கூறப்பட்டிருக்காது என்று கூறினார்.

இப்னு உயைனா அவர்கள் ஸைத் பின் அஸ்லம் —> அதாஉ பின் யஸார் (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளாரே (என்று எனது தந்தை அபூஹாதிம் அவர்களிடம் நான் கேட்டேன்.) அதற்கவர், இப்னு உயைனா அவர்களை விட ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்களே மிகவும் நினைவாற்றல் உள்ளவர் என்று பதில் கூறினார்.

(alilal-ibn-abi-hatim-642: 642)

وسألتُ أبِي ، وأبا زُرعة ، عَن حدِيثٍ ؛ رواهُ عبدُ الرّزّاقِ ، عن مَعمَرٍ ، عن زيدِ بنِ أسلم ، عن عطاءِ بنِ يسارٍ ، عن أبِي سعِيدٍ ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم ، قال :

لاَ تحِلُّ الصّدقةُ إِلاَّ لِخمسةٍ : رجُلٍ اشتراها بِمالِهِ ، أو رجُلٍ عامِلٍ عليها ، أو غارِمٍ ، أو غازٍ فِي سبِيلِ اللهِ تعالى ، أو رجُلٍ لهُ جارٌ فيتصدّقُ عليهِ فيُهدِي لهُ.
فقالا : هذا خطأٌ رواهُ الثّورِيُّ ، عن زيدِ بنِ أسلم ، قال : حدّثنِي الثّبتُ ، قال : قال رسُولُ اللهِ صلى الله عليه وسلم ، وهُو أشبهُ.
وقال أبِي : فإِن قال قائِلٌ : الثّبتُ من هُو أليس هُو عطاءُ بنُ يسارٍ ؟ قِيل لهُ : لو كان عطاء بن يسارٍ لِم يُكنِّ عنهُ.
قُلتُ لأبِي زُرعة : أليس الثّبتُ هُو عطاءٌ ؟
قال : لاَ ، لو كان عطاءً ما كان يُكنِّي عنهُ.
وقد رواهُ ابنُ عُيينة ، عن زيدٍ ، عن عطاءٍ ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم ، مُرسلا.
قال أبِي : والثّورِيُّ أحفظُ.


Alilal-Ibn-Abi-Hatim-Tamil-.
Alilal-Ibn-Abi-Hatim-TamilMisc-.
Alilal-Ibn-Abi-Hatim-Shamila-642.
Alilal-Ibn-Abi-Hatim-Alamiah-.
Alilal-Ibn-Abi-Hatim-JawamiulKalim-.




பார்க்க: இப்னு மாஜா-1841 .