தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-1933

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் வாய்மூடிவிட்டாரோ அவர் ஈடேற்றம் பெற்றுவிட்டார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

(almujam-alawsat-1933: 1933)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ نَافِعٍ قَالَ: نا أَحْمَدُ بْنُ صَالِحٍ قَالَ: نا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي ابْنُ لَهِيعَةَ، وَعَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ يَزِيدَ بْنِ عَمْرٍو الْمَعَافِرِيِّ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ صَمَتَ نَجَا»


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-1933.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-1975.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-6165-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் முஹம்மது பின் நாஃபிஃ
    என்பவர் யார் என்று தெரியவில்லை என ஹைஸமீ, இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    போன்றோர் கூறியுள்ளனர்.
  • என்றாலும் அபூபக்ர் நக்காஷ் அவர்கள், முஆவியா (ரலி) அவர்களின் சிறப்பு பற்றி இவரோ அல்லது ஹுஸைன் பின் யஹ்யா என்பவரோ ஒரு ஹதீஸை இட்டுக்கட்டியவர் என்று கூறியதால் இப்னுல் ஜவ்ஸீ பிறப்பு ஹிஜ்ரி 508/510
    இறப்பு ஹிஜ்ரி 597
    அவர்கள் இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: லிஸானுல் மீஸான்-1/634)

  • ஆனால் தப்ரானீ அவர்களின் ஆசிரியர்களின் விவரங்களைத் தனியாகத் தொகுத்த அபுத்தய்யிப் அவர்கள், ஹைஸமீ, இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    போன்றோர் இவர் அறியப்படாதவர் என்று கூறியது போன்றே அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்களும் கூறியுள்ளார் என்பதைக் குறிப்பிட்டு விட்டு இவரின் நிலைப் பற்றி அறியப்படவில்லை என்று கூறியுள்ளார்.

(நூல்: இர்ஷாதுல் காஸீ, வத்தானீ-211)

இப்னு யூனுஸ் அவர்கள் இவர் பலமானவர் என்றும்; இவரிடமிருந்து நான் ஹதீஸை எழுதியுள்ளேன்; இவர் ஹிஜ்ரீ 296 இல் மரணமடைந்தார் என்றும் கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸிகாது மிம்மன் லம் யகஃ ஃபில்குதுபிஸ் ஸித்தஹ்-764)

இந்த விளக்கம், நக்காஷ் அவர்களின் விளக்கத்தை விட சிறந்தது. நக்காஷ் சந்தேகமாக கூறியுள்ளார். இப்னு யூனுஸ் சந்தேகமாகக் கூறவில்லை.

மேலும் பார்க்க: திர்மிதீ-2501 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.