மூஸா பின் தல்ஹா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இறைநம்பிக்கையாளர்களுக்கு திடீர் மரணம் ஏற்படுவது, அல்லாஹ்வினுடைய கோபத்தின் வெளிப்பாடாகும் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்ற செய்தி ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எட்டியது. அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக!
திடீர் மரணம் இறைநம்பிக்கையாளர்களுக்கு இலேசாகும்; இறைமறுப்பாளர்களுக்கு (இறை)கோபத்தின் வெளிப்பாடாகும் என்றுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.
(almujam-alawsat-3129: 3129)حَدَّثَنَا بَكْرٌ قَالَ: نا سَعِيدُ بْنُ مَنْصُورٍ قَالَ: نا صَالِحُ بْنُ مُوسَى الطَّلْحِيُّ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ قَالَ:
بَلَغَ عَائِشَةَ، أَنَّ ابْنَ عُمَرَ، يَقُولُ: إِنَّ مَوْتَ الْفَجْأَةِ سَخْطَةٌ عَلَى الْمُؤْمِنِينَ، فَقَالَتْ: يَغْفِرُ اللَّهُ لِابْنِ عُمَرَ، إِنَّمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَوْتُ الْفَجْأَةِ تَخْفِيفٌ عَنِ الْمُؤْمِنِينَ، وَسَخْطَةٌ عَلَى الْكَافِرِينَ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ عَبْدِ الْمَلِكِ إِلَّا صَالِحٌ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-3129.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-3224.
إسناد شديد الضعف فيه صالح بن موسى الطلحي وهو متروك الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் பக்ர் பின் ஸஹ்ல் பலவீனமானவர்; ஸாலிஹ் பின் மூஸா மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க : அஹ்மத்-25042 .
சமீப விமர்சனங்கள்