ஹதீஸின் தரம்: விபரம் கீழே
உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…
அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)
(almujam-alawsat-3537: 3537)حَدَّثَنَا حَبُّوشُ بْنُ رِزْقِ اللَّهِ قَالَ: نا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ: نا رِشْدِينُ بْنُ سَعْدٍ، عَنْ قُرَّةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعُ رَحِمٍ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ قُرَّةَ، إِلَّا رِشْدِينُ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-3537.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-3654.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-15783-ரிஷ்தீன் பின் ஸஃத் பற்றி இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
அவர்கள் பலவீனமானவர் என்றும், இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் இவர் ஒரு பொருட்டே அல்ல என்றும், இப்னு நுமைர் பிறப்பு ஹிஜ்ரி 115
இறப்பு ஹிஜ்ரி 199
வயது: 84
அவர்கள் இவரின் செய்திகளை எழுதிக்கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளனர். - இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், இவர் நல்ல மனிதர் என்றாலும் பலவீனமானவர் என்று கூறியுள்ளார். இவர் அறிவிக்கும் நல்உபதேசம் சார்ந்த ஹதீஸ்கள் பரவாயில்லை என்று கூறியுள்ளார். - அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், இவரிடம் கவனக்குறைவு உள்ளது; இவர் பலமானவர்களிடமிருந்து முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்பதால் பலவீனமானவர் என்று கூறியுள்ளார். அபூஸுர்ஆ அவர்களும் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2320, அல்காமிஃலு ஃபிள்ளுஅஃபா-669, தஹ்தீபுத் தஹ்தீப்-3/278)..
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
இந்த கருத்தில் சரியான ஹதீஸ்களும் உள்ளன.
பார்க்க: புகாரி-5984 .
சமீப விமர்சனங்கள்