தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-4190

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கடைசிக்காலத்தில் கொடுங்கோலர்களான தலைவர்கள், தீய அமைச்சர்கள், துரோகம் இழைக்கும் நீதிபதிகள், பொய்யர்களான சட்டமேதைகள் தோன்றுவார்கள். உங்களில் ஒருவர் அக்காலத்தில் வாழ்ந்தால் அவர்களுக்காக வரி வசூலிப்பவராகவோ, அவர்களின் செயலாளராகவோ, காவலராகவோ இருக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(almujam-alawsat-4190: 4190)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ الثَّقَفِيُّ الْبَغْدَادِيُّ قَالَ: نا مُعَاوِيَةُ بْنُ الْهَيْثَمِ بْنِ الرَّيَّانِ الْخُرَاسَانِيُّ قَالَ: نا دَاوُدُ بْنُ سُلَيْمَانَ الْخُرَاسَانِيُّ قَالَ: نا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«يَكُونُ فِي آخِرِ الزَّمَانِ أُمَرَاءُ ظَلَمَةً، وَوُزَرَاءُ فَسَقَةً، وَقَضَاةٌ خَوَنَةٌ، وَفُقَهَاءُ كَذَبَةٌ، فَمَنْ أَدْرَكَ مِنْكُمْ ذَلِكَ الزَّمَانَ فَلَا يَكُونَنَّ لَهُمْ جَابِيًا، وَلَا عَرِيفًا، وَلَا شُرْطِيًّا»

لَا يُرْوَى هَذَا الْحَدِيثُ عَنْ قَتَادَةَ إِلَّا بِهَذَا الْإِسْنَادِ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-4190.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-4322.




  • 1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-15250-தாவூத் பின் ஸுலைமான் அல்குராஸானீ பற்றி அபுல் ஃபத்ஹ் அல்அஸ்தீ பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 374
    என்பவர் மட்டுமே மிக பலவீனமானவர் என்று கூறியுள்ளார். (நூல்: லிஸானுல் மீஸான்-3/398)

இவரே விமர்சிக்கப்பட்டவர் என்பதால் இவரின் விமர்சனம் ஏற்கப்படாது.

  • இவரின் தீர்ப்பு ஏற்கப்படாது என தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    போன்றோர் கூறியுள்ளனர்.

(நூல்: மீஸானுல் இஃதிதால்-1/61, ஃபத்ஹுல் பாரீ-1/386)

தப்ரானீ அவர்கள், இவரை சுமாரானவர் என்று கூறியுள்ளார்.

2 . என்றாலும் இதில் வரும் ராவீ-30630-அலீ பின் முஹம்மத் பின் அலீ யாரென அறியப்படாதவர். (நூல்: தாரீகு பக்தாத்-6406, இர்ஷாதுல் காஸீ, வத்தானீ-697)

  • 3 . மேலும் இதில் வரும் ராவீ-44819-முஆவியா பின் ஹைஸம் என்பவரின் நம்பகத்தன்மை அறியப்படவில்லை.

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

  • இந்த செய்தியை தாவூத் பின் ஸுலைமான் என்பவரிடமிருந்து அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஸாபித்
    என்பவரும் அறிவிப்பதாக தாரீக் பக்தாத்-5405 என்ற எண்ணில் இடம்பெற்றுள்ளது. என்றாலும் இதில் தாவூத் பின் ஸுலைமான் அல்மர்வஸிய் என்று இடம்பெற்றுள்ளது. இவர் அறியப்படாதவர் ஆவார். இவர் தான் தாவூத் பின் ஸுலைமான் அல்குராஸானீ என்று வைத்துக்கொண்டாலும் அதில் வரும் மற்றொரு அறிவிப்பாளர் அலீ பின் முஹம்மது என்பவர் பற்றி இவர் பலமானவர் என அல்அஸ்ஹரிய் கூறியுள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் ஹதீஸை எழுதுவதிலும், விளங்குவதிலும் தவறிழைப்பவர் என்று அபூபக்ர் அல்பர்கானீ கூறியுள்ளார்.

(நூல்: தாரீகுல் இஸ்லாம்-8/440, தாரீகு பக்தாத்-13/566)

மேலும் பார்க்க : இப்னு ஹிப்பான்-4586 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.