இந்த சமுதாயம் எழுபத்தி மூன்று கூட்டமாக பிரிவார்கள். ஒரு கூட்டத்தை தவிர அனைவரும் நரகம் செல்வர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, அந்த ஒரு கூட்டம் யார்? என்று மக்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நானும் என்னுடைய தோழர்களும் இன்றைய தினம் எப்படி இருக்கிறோமோ அப்படி இருக்கக் கூடியவர்கள்” தான் என்று பதிலளித்தார்கள்.
حَدَّثَنَا عِيسَى بْنُ مُحَمَّدٍ السِّمْسَارُ الْوَاسِطِيُّ قَالَ: نَا وَهْبُ بْنُ بَقِيَّةَ قَالَ: نَا عَبْدُ اللَّهِ بْنُ سُفْيَانَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«تَفْتَرِقُ هَذِهِ الْأُمَّةُ عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ فِرْقَةً، كُلُّهُمْ فِي النَّارِ إِلَّا وَاحِدَةً» . قَالُوا: وَمَا تِلْكَ الْفِرْقَةُ؟ قَالَ: «مَا أَنَا عَلَيْهِ الْيَوْمَ وَأَصْحَابِي»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ إِلَّا عَبْدُ اللَّهِ بْنُ سُفْيَانَ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-4886.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-5028.
إسناده ضعيف ويحسن إذا توبع ، رجاله ثقات عدا عبد الله بن سفيان الخزاعي وهو مقبول ، وعيسى بن محمد الواسطي وهو مجهول الحال
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-33027-ஈஸா பின் முஹம்மத் அஸ்ஸிம்ஸார் அல்வாஸிதீ என்பவர் யாரென அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: இப்னு மாஜா-3993 .
சமீப விமர்சனங்கள்