உபைதுல்லாஹ் பின் அபூபக்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாளில் மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு அல்லது இதைவிட குறைவான அல்லது அதிகமான பேரீச்சம்பழங்களை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள் என்று (என்னுடைய பாட்டனார்) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
(almujam-alawsat-5014: 5014)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ النَّضْرِ الْأَزْدِيُّ قَالَ: نَا أَبُو غَسَّانَ مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ النَّهْدِيُّ قَالَ: نَا زُهَيْرٌ قَالَ: نَا عُتْبَةُ بْنُ حُمَيْدٍ الضَّبِّيُّ قَالَ: نَا عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ أَنَسٍ قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ:
«مَا خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ فِطْرٍ حَتَّى يَأْكُلَ تَمَرَاتٍ، ثَلَاثًا، أَوْ خَمْسًا، أَوْ سَبْعًا، أَوْ أَقَلَ مِنْ ذَلِكَ أَوْ أَكْثَرَ، وِتْرًا»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ عُتْبَةَ بْنِ حُمَيْدٍ إِلَّا زُهَيْرٌ، تَفَرَّدَ بِهِ: أَبُو غَسَّانَ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-5014.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-5156.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி உத்பா பின் ஹுமைத் அவர்களைப்பற்றி அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம், இவர் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளார். அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் இவர் சுமாரானவர் என்று கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுல் கமால் 19/305) - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் நம்பகமானவர் என்றாலும் சில அறிவிப்புகளில் தவறிழைத்துள்ளார் என்று கூறியுள்ளார். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/657)
மேலும் பார்க்க: புகாரி-953 .
சமீப விமர்சனங்கள்