தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-953

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4

நோன்புப் பெரு நாள் தினத்தில் தொழச் செல்வதற்கு முன்பே சாப்பிடுவது. 

 அனஸ் (ரலி) அறிவித்தார்.

சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள்.

மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
Book : 13

(புகாரி: 953)

بَابُ الأَكْلِ يَوْمَ الفِطْرِ قَبْلَ الخُرُوجِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ:

«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَ يَغْدُو يَوْمَ الفِطْرِ حَتَّى يَأْكُلَ تَمَرَاتٍ»

وَقَالَ مُرَجَّأُ بْنُ رَجَاءٍ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي أَنَسٌ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «وَيَأْكُلُهُنَّ وِتْرًا»


Bukhari-Tamil-953.
Bukhari-TamilMisc-953.
Bukhari-Shamila-953.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-905.




  • இதன் இரண்டாவது அறிவிப்பாளர்தொடர் முஅல்லக் ஆகும்.
  • இதன் முதல் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹுஷைம் அவர்கள், இந்த செய்தியை உபைதுல்லாஹ் பின் அபூபக்ர் வழியாக அறிவித்திருப்பதாக வந்திருப்பது தவறு; அலீ பின் ஆஸிம் தான் உபைதுல்லாஹ் பின் அபூபக்ர் வழியாக அறிவித்துள்ளார்; ஹுஷைம் அவர்கள், இந்த செய்தியை முஹம்மது பின் இஸ்ஹாக் —> ஹஃப்ஸ் —> அனஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்திருப்பதே சரியானது என அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    கூறியுள்ளார். அதன் காரணமாகவே புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் அவர்கள், உபைதுல்லாஹ் பின் அபூபக்ர் வழியாக முரஜ்ஜஉ பின் ரஜா அவர்களின் அறிவிப்பை துணை ஆதாரமாக கூறியுள்ளார். (முரஜ்ஜஉ பின் ரஜா பற்றி சிலர் பலமானவர் என்று கூறியிருந்தாலும் சிலர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இவரின் சகோதரியின் மகனே இவரைப் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று விமர்சித்துள்ளார் என்பதால் இவர் பலவீனமானவர் என்பதே சரி என சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.)
  • மேற்கண்ட விமர்சனம் இருந்தாலும் ஸயீத் பின் ஸுலைமான் அவர்கள், ஹுஷைம் —> முஹம்மது பின் இஸ்ஹாக் என்ற அறிவிப்பாளர்தொடரிலும், ஹுஷைம் —> உபைதுல்லாஹ் பின் அபூபக்ர் என்ற அறிவிப்பாளர்தொடரிலும் (இரு வகையிலும்) அறிவித்துள்ளார். எனவே தான் பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    அவர்கள், ஹுஷைம் வழியாக வரும் இரண்டு வகை அறிவிப்பாளர்தொடர்களும் சரியானவைதான் என்று கூறியுள்ளார்.
  • முரஜ்ஜஉ பின் ரஜா வின் அறிவிப்பின் மூலம் மூன்று விசயத்தை புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் நிரூபிக்கிறார். 1. இந்த செய்தி உபைதுல்லாஹ் பின் அபூபக்ர் வழியாக வந்திருப்பதும் சரியானது தான். 2. பேரீச்சம் பழங்களை ஒற்றைப்படையாக சாப்பிடுவது என்ற கூடுதல் தகவல் இதில் உள்ளது 3. மேலும், உபைதுல்லாஹ் தனது பாட்டனார் அனஸ் (ரலி) யிடம் நேரடியாக செவியேற்றுள்ளார் என்ற தகவல் இதில் உள்ளது. இதுபற்றி விரிவாக இப்னு ரஜப் அவர்களும், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்களும் தங்களின் ஃபத்ஹுல் பாரியில் கூறியுள்ளனர்.

(நூல்: ஃபத்ஹுல் பாரீ ஹதீஸ் எண்-953)

1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • உபைதுல்லாஹ் பின் அபூபக்ர் பின் அனஸ் —> அனஸ் (ரலி)

பார்க்க : அஹ்மத்-1226813426 , புகாரி-953 , இப்னு மாஜா-1754 , முஸ்னத் பஸ்ஸார்-7457 , இப்னு குஸைமா- 1429 , இப்னு ஹிப்பான்- 2814 , அல்முஃஜமுல் அவ்ஸத்-5014 , தாரகுத்னீ-1717 , 1718 , ஹாகிம்-1090 , குப்ரா பைஹகீ-6152 , 6154 , 6155 , 6157 ,

  • ஹுஷைம் —> முஹம்மது பின் இஸ்ஹாக் —> ஹஃப்ஸ் —> அனஸ் (ரலி)

பார்க்க : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-5582 , தாரிமீ-1642 , திர்மிதீ-543 , முஸ்னத் பஸ்ஸார்-6457 , இப்னு குஸைமா-1428 , இப்னு ஹிப்பான்-2813 , ஹாகிம்-1089 , குப்ரா பைஹகீ-6153 ,

, அஹ்மத்-12676 ,    இப்னு குஸைமா-, 2066 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-542 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.