தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-542

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

நோன்புப் பெருநாளன்று தொழுகைக்குப் புறப்படுவதற்குமுன் உணவு உண்பது தொடர்பாக வந்துள்ளவை.

புரைதா பின் அல்ஹுஸைப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று உண்ணாமல் (தொழுகைக்குச்) செல்லமாட்டார்கள்.

ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தொழாமல் உணவு உண்ணமாட்டார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், அலீ (ரலி), அனஸ் (ரலி) ஆகியோர் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புரைதா பின் ஹுஸைப் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட
ஹதீஸ், ‘கரீப்’ எனும் வகையைச் சேர்ந்ததாகும்.

இந்த ஹதீஸின் (மூன்றாவது அறிவிப்பாளரான) ஸவாப் பின் உத்பா (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸைத் தவிர வேறு ஹதீஸ் எதையும் அறிவித்திருப்பதாக நான் அறியவில்லை என புகாரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நோன்புப் பெருநாளன்று எதையேனும் உட்கொண்ட பிறகே தொழுகைக்குச் செல்ல வேண்டும் என்று அறிஞர்களில் ஒரு குழுவினர் விரும்புகின்றனர். அதே நேரத்தில் (நோன்புப் பெருநாளன்று) பேரீச்சம் பழத்தை உண்பதும், ஹஜ்ஜுப் பெருநாளன்று தொழுதுவிட்டு திரும்பி வரும்வரை எதையும் உண்ணாமலிருப்பதும் விரும்பத்தக்கவை ஆகும் என்றும் கருதுகின்றனர்.

(திர்மிதி: 542)

بَابٌ فِي الأَكْلِ يَوْمَ الفِطْرِ قَبْلَ الخُرُوجِ

حَدَّثَنَا الحَسَنُ بْنُ الصَّبَّاحِ البَزَّارُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الوَارِثِ، عَنْ ثَوَابِ بْنِ عُتْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ:

«كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَخْرُجُ يَوْمَ الفِطْرِ حَتَّى يَطْعَمَ،

وَلَا يَطْعَمُ يَوْمَ الأَضْحَى حَتَّى يُصَلِّيَ»

وَفِي البَابِ عَنْ عَلِيٍّ، وَأَنَسٍ: «حَدِيثُ بُرَيْدَةَ بْنِ حُصَيْبٍ الأَسْلَمِيِّ حَدِيثٌ غَرِيبٌ» وقَالَ مُحَمَّدٌ: «لَا أَعْرِفُ لِثَوَابِ بْنِ عُتْبَةَ غَيْرَ هَذَا الحَدِيثِ» وَقَدْ اسْتَحَبَّ قَوْمٌ مِنْ أَهْلِ العِلْمِ: أَنْ لَا يَخْرُجَ يَوْمَ الفِطْرِ حَتَّى يَطْعَمَ شَيْئًا، وَيُسْتَحَبُّ لَهُ أَنْ يُفْطِرَ عَلَى تَمْرٍ، وَلَا يَطْعَمَ يَوْمَ الأَضْحَى حَتَّى يَرْجِعَ


Tirmidhi-Tamil-497.
Tirmidhi-TamilMisc-497.
Tirmidhi-Shamila-542.
Tirmidhi-Alamiah-497.
Tirmidhi-JawamiulKalim-497.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-9903-ஸவாப் பின் உத்பா-ஸவ்வாப் பின் உத்பா என்பவர் பற்றி, இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் பலமானவர் என்று கூறியுள்ளார்; شيخ صدق – உண்மையின் பெரியவர் என்று கூறியுள்ளார். (இதன் கருத்தும் பலமானவர் என்பதாகும். ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    அவர்கள் இந்த வழக்குச் சொல்லை கூறியுள்ளார்)
  • இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    அவர்கள் இவரின் செய்திகளை எழுதிக் கொள்ளலாம்; இவர் பலமானவர் அல்ல என்று கூறியுள்ளார்.
  • புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள், இவர் இந்த செய்தியைத் தவிர வேறு செய்திகளை அறிவித்ததாக எனக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள் இவர் பலமானவர்; இவர் அறிவிக்கும் இருசெய்திகளிலும் பலவீனம் இல்லை; இவர் شيخ صدق – உண்மையின் பெரியவர் என்று கூறியுள்ளார்.
  • அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அபூஅலீ அர்ரூத்பாரீ-தூஸீ ஆகியோர் இவர் விசயத்தில் குறையில்லை (சுமாரானவர்) என்று கூறியுள்ளனர்.
  • அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அபூஸுர்ஆ ஆகியோர் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் இவரை பலமானவர் என்று கூறியதாக உள்ள தகவலை மறுத்துள்ளனர்.
  • ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    அவர்கள் இவர் குறைந்த ஹதீஸ்களையே அறிவித்துள்ளார். இவரின் செய்தியை ஏற்கக்கூடாது என்பதற்கு இவரைப் பற்றி எந்தக் குறையும் கூறப்படவில்லை என்று கூறியுள்ளார்.
  • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள், இவரிடம் சிறிது பலவீனம் உள்ளது என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவரை மக்பூல் எனும் தரத்தில் கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2/471, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-2/308, அல்காஷிஃப்-2/193, தஹ்தீபுத் தஹ்தீப்-1/275, தக்ரீபுத் தஹ்தீப்-1/190)


تاريخ ابن معين – رواية الدوري (4/ 135):

3565 – سَمِعت يحيى يَقُول ‌ثَوَاب ‌بن ‌عتبَة ثِقَة

تاريخ ابن معين – رواية الدوري (4/ 272):

4333 – سَمِعت يحيى يَقُول ثَوَاب بن عتبَة شيخ صدق حدث عَنهُ أَبُو عُبَيْدَة الْحداد وَغَيره قَالَ أَبُو الْفضل فَإِن كنت كتبت عَن أبي زَكَرِيَّا فِيهِ شَيْئا أَنه ضَعِيف فقد رَجَعَ أَبُو زَكَرِيَّا وَهَذَا هُوَ القَوْل الْأَخير من قَوْله.

ஸவாப் பின் உத்பா பலமானவர் என்று யஹ்யா பின் மயீன் (இப்னு மயீன்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று அபுல்ஃபள்ல்-அப்பாஸ் அத்தூரீ அறிவித்துள்ளார்.

மேலும் அபூஸகரிய்யா-இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள், ஸவாப் பின் உத்பா பலவீனமானவர் என்று கூறியதை நீ எழுதியிருந்தால் (அதை மாற்றிக்கொள். ஏனெனில்) இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அதைவிட்டு விலகிவிட்டார். இதுவே அவரின் இறுதி கருத்தாகும் என்று அபுல்ஃபள்ல்-அப்பாஸ் அத்தூரீ கூறியுள்ளார்.

(நூல்: தாரீகு இப்னு மயீன்-அப்பாஸ் அத்தூரீ-3565, 4333)


இவரைப் பற்றி விமர்சனம் செய்தவர்கள் காரணத்தைக் கூறவில்லை. இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
ஆகியோரின் இருவகையான கருத்துக்களின்படியே பின்னால் வந்த அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

இப்னுல் கத்தான் அல்ஃபாஸீ பிறப்பு ஹிஜ்ரி 562
இறப்பு ஹிஜ்ரி 628
வயது: 66
அவர்கள், இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்களின் கருத்தின்படி இந்தச் செய்தியை சரியானது என்று கூறியுள்ளார். திர்மிதீ அவர்களின் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

(நூல்: பயானுல் வஹ்மி வல்ஈஹாம்-5/355, 356)

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள், இந்தக் கருத்தில் வரும் மூன்று வகையான செய்திகளைக் குறிப்பிட்டுவிட்டு இவற்றில் விமர்சனம் உள்ளது என்று கூறியுள்ளார்.

(நூல்: ஃபத்ஹுல் பாரீ-2/519)

இந்தச் செய்தியை சரியானது என்று கூறமுடியும் என்றாலும் ஸவாப் பின் உத்பாவைப் பற்றி இருவகையான கருத்துக்கள் இருப்பதால் ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
போன்றோர் இந்த செய்தியை ஹஸன் தரம் என்று கூறியுள்ளனர்.

இந்தச் செய்தியின் கருத்து, புகாரி-953 இல் இடம்பெறும் செய்திக்கு மாற்றமாக தெரிவதால் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
போன்றோர் இதில் விமர்சனம் உள்ளது என்று கூறுகின்றனர். புகாரியில் இடம்பெறும் செய்தியில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு முன்பே அபூபுர்தா பின் நியார் (ரலி) அவர்கள் குர்பானி பிராணியை அறுத்து காலை உணவாக சாப்பிட்டார் என்று இடம்பெற்றுள்ளது.

(என்றாலும் நபி (ஸல்) அவர்களின் செயலாக வந்துள்ள மேற்கண்ட செய்தியும், புகாரியில் இடம்பெறும் செய்தியையும் முரண்படாதவாறு விளங்கலாம் என்பதால் இதை பலவீனம் என்று சொல்லத் தேவையில்லை; ஹஜ்பெருநாள் தொழுகைக்கு பின் சாப்பிடுவது நபி (ஸல்) அவர்களின் நடைமுறையாக இருந்துள்ளது. ஹஜ்பெருநாள் தொழுகைக்கு முன்பே ஒருவர் சாப்பிடும் தேவையுள்ளவராக இருந்தால் சாப்பிடலாம் என்பதற்கும் அனுமதி உள்ளது. ஆனால் குர்பானி பிராணியை தொழுகைக்கு பிறகு தான் அறுக்க வேண்டும் என்று இந்த ஹதீஸ்களிலிருந்து புரிந்துக் கொள்ளலாம்) …

1 . இந்தக் கருத்தில் புரைதா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸவாப் பின் உத்பா —> அப்துல்லாஹ் பின் புரைதா —> புரைதா (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-849 , அஹ்மத்-2298323042 , இப்னு மாஜா-1756 , திர்மிதீ-542 , இப்னு குஸைமா-1426 , இப்னு ஹிப்பான்-2812 , தாரகுத்னீ-1715 , ஹாகிம்-1088 , குப்ரா பைஹகீ-6159 , 6160 ,

  • உக்பா பின் அப்துல்லாஹ் (அல்அஸம்) —> அப்துல்லாஹ் பின் புரைதா —> புரைதா (ரலி)

பார்க்க: அஹ்மத்- 22984 , தாரிமீ-1641 , அல்முஃஜமுல் அவ்ஸத்-3065 , குப்ரா பைஹகீ-6161 ,

2 . ஜாபிர் பின் ஸமுரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-4273 .

3 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-451 .

இந்தச் செய்தியின் முதல் பகுதியின் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-953 .

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-955 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.